புகையிலையை எந்த அபராதமும் இல்லாமல் விற்பனை செய்யலாம்…! மத்திய அரசு அனுமதி…!

கர்நாடகாவில் உள்ள ஏல தளங்களில், பதிவு செய்யப்பட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான புகையிலையையும், பதிவு செய்யப்படாத விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அங்கீகரிக்கப்படாத புகையிலையையும் எந்த அபராதமும் இல்லாமல் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

கர்நாடக பயிர்ப் பருவத்தில் உற்பத்தி குறைந்ததைக் கருத்தில் கொண்டு, பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான புகையிலை மற்றும் பதிவு செய்யப்படாத விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அங்கீகரிக்கப்படாத ஈரப்பதம் நீக்கி வெப்பமூட்டப்பட்ட வர்ஜீனியா புகையிலை (flue cured Virginia tobacco – FCV tobacco) ஆகியவற்றை எந்த அபராதமும் இல்லாமல் விற்பனை செய்ய மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பரிசீலித்து அனுமதித்துள்ளார்.

கர்நாடகாவில், இந்த பயிர் பருவத்தில், 40,207 விவசாயிகள் 60,782 ஹெக்டேர் பரப்பளவில் எஃப்.சி.வி. புகையிலையை பயிரிட்டனர். 2022 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக, கர்நாடகாவில் எஃப்.சி.வி. புகையிலையின் மொத்த உற்பத்தி அளவு குறைந்தது. அது புகையிலை வாரியத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கான 100 மில்லியன் கிலோ என்ற அளவை விட குறைவாக 59.78 மில்லியன் கிலோவாக மட்டுமே இருந்தது.

Vignesh

Next Post

சாதாரண விசாரணையை மனித உரிமை மீறலாக கருத முடியாது!... சென்னை ஐகோர்ட் அதிரடி!

Sun Feb 19 , 2023
காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் நடந்தாலும் சாதாரண ஒவ்வொரு போலீஸ் விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களாக கருத முடியாது என்று சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது வெள்ளி விளக்குகள் விற்பனை செய்த வகையில் தனக்கு தரவேண்டிய பாக்கியை தராததால் சலானிக்கு எதிராக வெள்ளி வியாபாரி ரமேஷ், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தன்னை விசாரிக்க அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்ததுடன், தனது காரின் ஆவணங்களை […]

You May Like