“திமுக அரசை அரசு ஊழியர்கள் மன்னிக்க மாட்டார்கள்.. தேர்தலில் ஏமாற்றத்தைப் பரிசளிப்பர்..” நயினார் நாகேந்திரன் காட்டம்..!

nainar nagendran mk Stalin 2025

வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை திமுக அரசு வஞ்சிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டுமென நியாயமான கோரிக்கையை முன்வைத்துப் போராடும் ஊராட்சி செயலாளர்களைக் கைது செய்வது, பணியிட மாறுதல் செய்வது, பணியிடை நீக்கம் செய்வது போன்ற பாசிச நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே, தனது திறனற்ற நிர்வாகத்தால் முறையான வசதிகளின்றியும், கிராம சபைக் கூட்டம் நடத்தப்படாமலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமலும் சீரழிந்து வரும் ஊரக நிர்வாகத்தை மேலும் சிதைக்கும் வண்ணம், ஊராட்சி செயலாளர்கள் நலனையும் திமுக அரசு உதறியெறிவது நியாயமா?

தேர்தல் நெருங்கியதும் ஏனோதானோவென அவசரகதியில் ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து, பெருமை பீற்றிக் கொள்வதில் காட்டிய அக்கறையில் சிறு துளியேனும் அதனைச் செயல்படுத்துவதிலும், அனைத்துத்தரப்பட்ட ஊழியர்களை இணைப்பதிலும் அக்கறை காட்டாத திமுக அரசை, இனி என்றும் அரசு ஊழியர்கள் மன்னிக்க மாட்டார்கள்! போலி வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய திமுக அரசுக்குத் தேர்தலில் ஏமாற்றத்தைப் பரிசளிப்பர்!” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : “செங்கோட்டையன் ஒரு கிழவர்.. அவர் எந்த நாட்டிற்கு விஜய்யை முதல்வராக்கப் போகிறார்..” அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்..!

RUPA

Next Post

என்ன ஆச்சு..? சரத் பவார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..!

Mon Feb 9 , 2026
முன்னாள் மத்திய அமைச்சரான சரத் பவார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. தொண்டை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இருமல் காரணமாக புனேயில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். என்சிபி (எஸ்பி) கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு தொண்டை தொற்று ஏற்பட்டிருப்பதால், அவர் ரூபி ஹால் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக அவரது நெருங்கிய உதவியாளர் ஒருவர் தெரிவித்தார். ரூபி ஹால் கிளினிக்கின் தலைமை இருதயநோய் நிபுணரும், நிர்வாக அறங்காவலருமான […]
Sharad Pawar 3

You May Like