அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.
அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் நாளை காலை 11.00 மணியளவில் ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சலகங்களுடன் தொடர்புடைய ஓய்வூதியதாரர்கள் ஏதாவது புகார்கள் இருப்பின் அவற்றை தபால் மூலமாகவும், மின்னஞ்சல் (dochennaicitycentral@indiapost.gov.in) மற்றும் வாட்ஸ்-அப் (8939646404) மூலமாக 23.07.2025-க்குள் அனுப்பி இருக்க வேண்டும்.
மொபைல் செயலி
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் புதுமைப் பெண்/ தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான பிரதமரின் விவசாய நிதி ஆதரவு கணக்குகள், 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கணக்குகள், கர்ப்பிணி பெண்களுக்கான பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டக் கணக்குகள், முதியோர் உதவி தொகை கணக்குகள் உள்ளிட்ட அனைத்து விதமான அரசு மானியம் /உதவி தொகை பெறும் கணக்குகளும் இதில் அடங்கும்.
தொடக்க காலத்தில் தொடங்கப்பட்ட கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது. சேமிப்பு கணக்குகளுக்கு வாரிசுதாரரை நியமிப்பதன் மூலம், கணக்குதாரர் மறைவுக்குப் பிறகு வங்கிக் கணக்கில் உள்ள தொகையை மிக எளிதாகவும், விரைவாகவும் வாரிசுதாரர்கள் பெற வகை செய்கிறது.