GUJARAT| 3,100 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்.! 5 பாகிஸ்தானியர்கள் கைது.!

GUJARAT: இந்திய துணை கண்டத்தில் மிகப்பெரிய போதைப் பொருள்(Narcotics) கடத்தல் முறியடிப்பு. இந்திய கப்பற்படை(INS) தீவிரவாத தடுப்பு பிரிவு(ATS) குஜராத் மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்துடன்(NCB) இணைந்து நடத்திய சோதனையில் 5 பாகிஸ்தானியர்கள் கைது.3100 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்.

இந்திய கடற்படை ATS குஜராத் மற்றும் NCB உடன் இணைந்து ஒரு கப்பலில் இருந்த பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3100 கிலோ போதை பொருட்களை கைப்பற்றி இருக்கிறது. இது இந்திய துணை கண்டத்தில் நடுக்கடலில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் என செய்திகள் தெரிவிக்கின்றன.

குஜராத்(Gujarat) கடற்கரையில் சர்வதேச எல்லை கோடு அருகே 3100 கிலோ போதை பொருட்களை(Narcotics) ஏற்றி வந்த கப்பலை இந்திய பாதுகாப்பு படை மற்றும் அமலாக்கத் துறையினர் தடுத்து நிறுத்தினார். போதைப் பொருள் கடத்தி வந்த கப்பலை தடுத்து நிறுத்திய இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் அதிலிருந்த 5 பாகிஸ்தான் பணியாளர்களை கைது செய்துள்ளனர்.

அரபிக் கடலில் சர்வதேச எல்லை கோடு அருகே நடத்தப்பட்ட இந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை போதை பொருள் வர்த்தகத்தை எதிர்த்து போராடுவதற்கான இந்திய அதிகாரிகளின் இடைவிடாத முயற்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

போதை பொருள் கடத்தல் குறித்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. குஜராத் அருகே இந்திய கடல் வழியாக போதைப் பொருள்கள் கடத்தல் பற்றிய உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்திய அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலின் அடிப்படையில், இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அரபிக் கடலின் நடுவே ஈரானிய கப்பலில் இருந்த 3,100 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்களை கைப்பற்றியதோடு கப்பலில் இருந்த 5 பாகிஸ்தான் பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புத் துறை தகவல்களின்படி போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு அரபிக்கடல் ஒரு முக்கியமான பாதையாக செயல்படுகிறது. இதன் விளைவாக எல்லை தாண்டிய போதை பொருள் வர்த்தகத்தை தடுப்பதில் இந்திய பாதுகாப்பு படையினருக்கு இது மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. எனினும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. மேலும் இது இந்தியாவின் கடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

English Summary: Indian Navy ATS Gujrat and NCB seized 3100 KG Narcotics in a vessel. 5 Pakistan crew members arrested.

Read More: Lok Sabha | திமுகவுடன் கூட்டணி முறிவா..? பரபரப்பை கிளப்பிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை..!!

Next Post

Vanangaan | 'வணங்கான்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகையை அடித்த இயக்குனர் பாலா..!! விலகியதற்கு காரணம் இதுதான்..!!

Wed Feb 28 , 2024
‘வணங்கான்’ படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் பாலா தன்னை அடித்ததாகவும் அதனால், அந்தப் படப்பிடிப்பில் இருந்து தான் விலகியதாகவும் நடிகை மமிதா கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்றப் பல படங்களை இயக்கியவர் பாலா. இவரது படங்களின் கதாநாயகர்கள் பெரும்பாலும் தனிமை விரும்பி, சமூகத்தோடு அதிகம் ஒட்டாதவர்கள் என இயல்புக்கு மாறாக கதைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார்கள். நடிகர் விக்ரம் மகன், துருவ் விக்ரம் நடிப்பில் இவர் […]

You May Like