நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவின் மத்திய பெனு மாநிலத்தின் யெலேவாடா என்ற கிராமத்தில் திடீரென நுழைந்த துப்பாக்கித்தாரிகள் அப்பாவி மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். வெள்ளிக்கிழமை இரவு முதல் இன்று அதிகாலை வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காணாமல் போனதாகவும், டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர், அம்னஸ்டி இன்டர்நேஷனல் நைஜீரியா தெரிவித்துள்ளது . பல குடும்பங்கள் படுக்கையறைகளுக்குள் பூட்டப்பட்டு எரிக்கப்பட்டன,” என்று அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பகுதியில் மேய்ச்சல் நிலத்தை தேடும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இது இன மற்றும் மத பதட்டங்களால் மோசமடைகிறது. அதாவது, நைஜீரியாவின் மத்திய பெல்ட்டில் அமைந்துள்ள இந்தப் பகுதி, பெரும்பாலும் முஸ்லிம் மேய்ப்பர்களுக்கும் பெரும்பாலும் கிறிஸ்தவ விவசாயிகளுக்கும் இடையே ஏராளமான மோதல்களைக் கண்டுள்ளது.
கடந்த மாதம், நைஜீரியாவின் மத்திய பெனு மாநிலத்தின் க்வெர் வெஸ்ட் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் நடந்த தொடர் தாக்குதல்களில் குறைந்தது 42 பேர் மேய்ப்பர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2019 முதல், மோதல்கள் இப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. மேலும் 2.2 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
Readmore: காவ்யா மாறனுடன் திருமணமா?. கொஞ்சம் சில் பண்ணுங்க காய்ஸ்!. அனிருத் போட்ட ட்வீட்!.