தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் இன்று கரூரில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.இதனால் இந்நிகழ்ச்சிக்கு வருவோரிடம் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். அதன் பின், 285 நாட்களுக்குப் பிறகு கரூருக்கு முதல்வராக விஜய் செல்கிறார்.இந்த நிகழ்ச்சி கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை அருகே உள்ள தனியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. மக்கள் சந்திப்புக்காக சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார்.
அனைவருக்கும் QR குறியீடு கொண்ட நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.நுழைவாயிலில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். QR குறியீடு கொண்ட அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஆயுதங்கள், தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் உள்ளதா என ஒவ்வொருவரையும் பரிசோதித்து வருகின்றனர்.இந்த சோதனையின்போது, சிலரிடம் இருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து கரூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளார். இதற்காக அட்லஸ் கலையரங்கம் முதல் சுற்றுலா மாளிகை வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியை முன்னிட்டு, அருகிலுள்ள மூன்று பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதலே விஜய்யை காண பொதுமக்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர்.
Read Also:“என்ன அங்க தொடாத தாத்தா…” கெஞ்சிய சிறுமி; சொந்தப் பேத்தியை கர்ப்பமாக்கிய முதியவரால் பரபரப்பு..



