கள்ளத்தொடர்பு சம்பவங்கள் தற்போது சமூகத்தில் அதிகரித்து வருவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. இதனால் பல குடும்பங்கள் சீர்குலைவதோடு, அதன் பாதிப்பை அதிகமாகச் சந்திப்பவர்கள் குழந்தைகளே. அந்த வகையில், கோயம்புத்தூரில் பெண் ஒருவரின் கள்ளத்தொடர்பு காரணமாக அவரது மகன்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் திருப்பத்தூரைச் சேர்ந்த 30 வயதான பூவரசன் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், பூவரசனுக்கும் பேக்கரி உரிமையாளரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில், இவர்களின் கள்ளத்தொடர்பு குறித்து பேக்கரி உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பூவரசனை அழைத்து கண்டித்துள்ளார். மேலும், சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அவரை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார். இதனிடையே, நேற்று போதையில் இருந்த பூவசரன், மார்க்கெட் சாலையில் சென்றுள்ளார். அப்போது, பேக்கரி உரிமையாளரின் மகன்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 5 பேர் பூவரசனை பார்த்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் பூவரசனை வழிமறித்து வாக்குவாதம் செய்துள்ளனர்.
இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, ஒரு கட்டத்தில் 5 பேரும் சேர்ந்து பூவரசனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பூவரசன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பூவரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Also Read: “என்ன அங்க தொடாத தாத்தா…” கெஞ்சிய சிறுமி; சொந்தப் பேத்தியை கர்ப்பமாக்கிய முதியவரால் பரபரப்பு..



