வௌவால் மூலம் பரவும் புதிய கொடிய வைரஸ் கண்டுபிடிப்பு!… உகான் ஆய்வகம் அதிர்ச்சி தகவல்!

வௌவாலில் இருந்து மனிதர்களுக்கு பரவும் கொடிய வைரஸ் ஒன்று தாய்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் மீண்டும் ஒரு கொரோனா அல்லது அதற்கு மேற்படியான வைரஸை உலகம் எதிர்கொள்ளலாம் எனவும் உகான் ஆய்வகம் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகர சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படும் மர்ம வைரஸ் பரவலை, உகான் வைரஸ் ஆராய்ச்சி (Wuhan Institute of Virology) நிறுவனம் கண்டறிந்தது. இந்த வைரஸ் பின்னாளில் உலகளவில் பரவி, 2 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குள் சிக்க வைத்தது. பல அலைகளாக, பாதிக்கப்படும் நபர்களின் உடலுக்கேற்ப தன்னை தகவமைத்து மக்களை வாட்டி வதைத்தது. இந்த வைரஸ் பரவலை உகானில் உள்ள ஆய்வகம் கண்டறிந்ததாகவும், உகான் ஆய்வகமே இந்த வைரஸை உருவாக்கி இருந்தது என்றும் பல்வேறு குற்றசாட்டுகள் இன்றளவும் முன்வைக்கப்பட்டன.

சீனாவின் மீது உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்கா, கொரோனா விவகாரத்தில் சரமாரி குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தது. முதலில் இந்த வைரஸ் சீனாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அங்கு மக்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளால் அவை கட்டுப்படுத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து, உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் அதிகளவு பாதிக்கப்பட்டன. தற்போது வரை உலகளவில் கொரோனாவுக்கு 6,967,042 பேர் பலியாகினர். அமெரிக்காவில் மட்டும் 1,191,815 பேர் பலியாகினர். இந்தியாவின் பலி எண்ணிக்கை 5 இலட்சம் ஆகும்.

பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் என்பது நீக்கினாலும், சமீபத்தில் மீண்டும் அப்பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியாவும் மீண்டும் மிகமிக குறைவான அளவில் கொரோனா பரவல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் பல மர்மங்கள் இன்றளவும் நீடித்து வரும் நிலையில், உகான் ஆய்வகம் தாய்லாந்தில் மற்றொரு புதிய வைரஸ் பரவலை கண்டறிந்து இருக்கிறது.

இதுதொடர்பான தகவல் தெரிவித்துள்ள உகான் ஆய்வகம், வௌவாலில் இருந்து மனிதர்களுக்கு பரவும் கொடிய வைரஸ் ஒன்று தாய்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளது என கூறியுள்ளது. இதனால் மீண்டும் ஒரு கொரோனாவோ அல்லது அதற்கு மேற்படியான வைரஸை உலகம் எதிர்கொள்ளலாம் எனவும் அஞ்சப்படுகிறது. ஏற்கனவே உலக சுகாதார அமைப்பும் கொரோனாவின் வீரியம் மறைந்ததாக தெரிந்தாலும், அது கானல் நீரே. அதன் தாக்கம் எப்போதும் வெளிப்படும் என எச்சரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

எதற்கு இத்தனை சீனியர் வக்கீல்கள்..? நீதிபதியை மிரள வைத்த பொன்முடி..!! சுப்ரீம் கோர்ட்டில் நடந்த சம்பவம்..!!

Sat Jan 13 , 2024
கடந்த 2006 – 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் பொன்முடி. இவர், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிந்தது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். […]

You May Like