மக்கள் தூக்கி எறிந்தும் திருந்தலையா..? திமுகவை வெளுத்து வாங்கிய தவெக..!! பரபரப்பு அறிக்கை..!!

stalin vijay

தமிழக அரசியலில் மேகதாது அணை விவகாரம் மீண்டும் பூதாகரமாக உருவெடுத்துள்ள நிலையில், ஆளும் த.வெ.க அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. மேகதாது விவகாரத்தில் திமுக முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தவெக அறிக்கை வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”மேகதாது அணை விவகாரமானது கடந்த 2026 மே 10-ஆம் தேதிக்குப் பிறகுதான் தொடங்கியது என்பதைப் போல திமுக தலைமை பேசி வருவது, அவர்களின் அறியாமையையே காட்டுவதாகத் தமிழக அரசு கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த காலங்களில் மேகதாது விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்த திமுகவே, தற்போது தங்களின் செயல்பாடற்ற தன்மைக்குத் தானே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து வருவதாக கூறியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டு ஆட்சி அதிகாரத்தை இழந்த பிறகும், தாங்களே இன்னமும் ஆளுங்கட்சியாக இருப்பது போன்ற கற்பனை உலகில் திமுக தலைமை வலம் வருவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல் இயங்கி வரும் திமுகவுக்கு சரியான வழிகாட்ட அங்கு ஆட்களே இல்லை என்பதை இது உணர்த்துவதாகவும், ஆட்சியில் இருந்தபோது மக்கள் நலனில் தீவிரமாக செயல்படாத காரணத்தினாலேயே மக்கள் அவர்களை நிராகரித்து ஒதுக்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி அதிகாரத்தைப் பறி கொடுத்த விரக்தியிலும், பொறாமையிலும், பதவி வெறியிலும் திமுக தலைமை தெரிவித்து வரும் கருத்துகளைத் தமிழக மக்கள் நன்கு உணர்ந்து தெளிவோடு இருக்கிறார்கள் என்றும், திமுக தான் இன்னும் உண்மையை உணராமல் பிதற்றி வருவதாகவும் சாடப்பட்டுள்ளது. மேகதாது பிரச்சனை மட்டுமன்றி, தமிழகத்தின் மாநில உரிமை சார்ந்த எந்தவொரு விவகாரத்திலும் விவசாயிகளின் வாழ்வாதாரமும், பொதுமக்கள் நலனும் சிறிதும் பாதிக்கப்படாத வகையில் தவெக அரசு உறுதியோடு நின்று உரிமைகளைக் காக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : “வாய்ப்பு வேண்டுமா? முதல்ல அட்ஜஸ்ட்மென்ட்…” மனவேதனையுடன் பேசிய சீரியல் நடிகை!

Next Post

BREAKING | வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் ஜெயில்..!! கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறியது மசோதா..!!

Thu Jul 30 , 2026
நாட்டின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு, தேசிய கீதத்திற்கு இணையான உயர்ந்த அந்தஸ்தை வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் அமளிக்கு மத்தியிலும், ஆளுங்கட்சியின் பெரும்பான்மையுடன் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய மசோதாவின்படி, ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலை […]
Parliament 2026

You May Like