BREAKING | வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் ஜெயில்..!! கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறியது மசோதா..!!

Parliament 2026

நாட்டின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு, தேசிய கீதத்திற்கு இணையான உயர்ந்த அந்தஸ்தை வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.


திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் அமளிக்கு மத்தியிலும், ஆளுங்கட்சியின் பெரும்பான்மையுடன் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த புதிய மசோதாவின்படி, ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலை அவமதிக்கும் வகையிலோ அல்லது அதற்கு மரியாதை செலுத்தத் தவறும் வகையிலோ செயல்படுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் கடுமையான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ள இந்த மசோதா, அடுத்தகட்டமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது. குடியரசுத் தலைவர் இதில் கையெழுத்திட்டவுடன், இது அதிகாரப்பூர்வ சட்டமாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : மக்கள் தூக்கி எறிந்தும் திருந்தலையா..? திமுகவை வெளுத்து வாங்கிய தவெக..!! பரபரப்பு அறிக்கை..!!

Next Post

BREAKING | தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு..!! காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி..!!

Thu Jul 30 , 2026
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறந்துவிடக் கோரும் விவகாரத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்திற்கு நாள்தோறும் உரியப் பங்கீட்டு நீரைத் திறந்துவிட வேண்டும் எனக்கூறி, காவிரி ஒழுங்காற்றுக் குழு ஏற்கனவே பரிந்துரைத்திருந்தது. இருப்பினும், கர்நாடக அரசு வழக்கம் போல் நீர் திறக்க மறுப்பு தெரிவித்து வந்ததோடு, மேகதாது அணை விவகாரத்தையும் மீண்டும் கையில் எடுத்துப் பிரச்சனையை […]
Kaveri 2026

You May Like