கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. இன்ஸ்டாகிராமில் மனைவி போட்ட ரீல்ஸ்.. கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்..! கதறிய குழந்தைகள்..

affair murder

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே இடையன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜய் – ஷர்மிளா தம்பதி. இந்த தம்பதி இரண்டு குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான விஜய் வேலைக்காக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். இதற்கிடையே ஷர்மிளாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.


அடிக்கடி யாருடனோ ஷர்மிளா செல்போனில் பேசுவதையும் விஜய் கவனித்துள்ளார். விஜய் வீட்டில் இல்லாத நேரம் யாரோ ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வதாகவும் அக்கம் பக்கத்தினர் விஜய்யிடம் கூறியிருக்கிறார்கள். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 2 தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வரவே, ஷர்மிளா கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதற்கு பிறகு, விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனால், விஜய் தற்கொலை செய்திருக்க மாட்டார், அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கருதி உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே ஷர்மிளாவிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இறுதியில், தனது அம்மாவுடன் சேர்ந்து, விஜயை கொன்றதாக ஷர்மிளா வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் கூறியதாவது: ஷர்மிளாவின் கள்ளக்காதலன் விஜயின் நெருங்கிய நண்பர் தான். விஜய்யின் வீட்டுக்கு, அந்த நண்பர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதனால் ஷர்மிளாவுக்கும், அந்த நண்பருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் வெளியூர் சென்றால், அவர் எப்போது வருவார்? எங்கே இருக்கிறார்? என்றெல்லாம் கள்ளக்காதலனுக்கு நன்றாகவே தெரியும். அந்த சமயம் இருவரும் பல இடங்களுக்கு சென்று ஜாலியாக ஊர் சுற்றியுள்ளனர். மேலும் ரீல்ஸ்கள் மற்றும் போட்டோவை எடுத்துள்ளனர். இதனை எல்லாம் ஷர்மிளா இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்துள்ளார். வெளியூரில் உள்ள விஜய், இந்த ரீல்ஸ் வீடியோ பார்த்து அதிர்ச்சியடைந்து ஷர்மிளாவை கண்டித்துள்ளார்.

இதுகுறித்து 2 நாளைக்கு முன்பும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.. அப்போது ஷர்மிளா மற்றும் அவரது தாயார் இருவரும் சேர்ந்து விஜய்யை உருட்டுக்கட்டையாலும், கம்பியாலும் தாக்கியுள்ளனர். மேலும் அவரது கழுத்தை கயிற்றால் கட்டி, ஜன்னல் கம்பியில் இறுக்கி கொலை செய்துள்ளனர். பிறகு தூக்குபோட்டு கொண்டதாக நாடகமாடியுள்ளனர். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Read more: பொய்களை அடுக்கும் அதிபர்; ஜி20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது!. வெள்ளை மாளிகை அறிவிப்பு!. என்ன காரணம்?.

English Summary

Having fun with a murderer.. Wife posts reels on Instagram.. The cruelty that befell the husband who reprimanded him..!

Next Post

உங்கள் வயதுக்கு ஏற்ப எவ்வளவு டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும்? மருத்துவர் சொன்ன பதில்!

Fri Nov 21 , 2025
காலை எழுந்தவுடன் நாம் அனைவரும் செய்யும் முதல் வேலை பல்துலக்குவது தான்.. பல்துலக்குவது என்பது நம் பல் பராமரிப்பு நடைமுறையின் ஒரு முக்கிய பகுதியாகும். டூத் பேஸ்ட்டில் பல்வேறு பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும்; அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. டூத் பேஸ்ட்டில் உள்ள முக்கியமான கூறுகளில் ஒன்றாக ஃப்ளூரைடு இருக்கிறது. இது பற்களின் மேல்தோலான ஈறுகளை பலப்படுத்தி, பல் சிதைவுகளை (cavities) தடுக்க உதவுகிறது. பற்பசையுடன் […]
toothpaste

You May Like