இன்றைய நகர வாழ்க்கையில் திருமணத்திற்கு முன் உடல் உறவு கொள்வது மிகவும் சாதாரணமானது. ஆனால் சில நாடுகளில் இந்த வகையான கலாச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
இந்தோனேசியா: 2022 ஆம் ஆண்டு இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தின்படி, திருமணத்திற்கு முன்பு ஒருவருடன் உடல் உறவு கொள்வது இங்கு குற்றமாகக் கருதப்படுகிறது. அதே போல் திருமணம் தாண்டிய உறவும் பெரும் குற்றமாக கருதப்படுகிறது. இந்த விதியை யாராவது மீறினால், அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த விதி இந்தோனேசிய மக்களுக்கும், இங்கு வசிக்கும் அல்லது வருகை தரும் வெளிநாட்டினருக்கும் பொருந்தும். எந்தவொரு வெளிநாட்டவரும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர் தண்டிக்கப்படலாம். காரணம் என்னவென்றால் இந்தோனேசியா ஒரு முஸ்லிம் பெரும்பான்மை நாடு.
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டால் மரண தண்டனை வழங்கப்படுகிறது. இங்கு தலிபான்கள் ஆட்சி செய்து வருகின்றனர். தலிபான்கள் ஷரியா சட்டத்தை பின்பற்றுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இந்த இஸ்லாமிய தேசத்தில் கூட திருமணம் செய்யாமல் உறவுகொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இங்கே யாராவது இப்படிச் செய்து பிடிபட்டால் அவருக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும். இங்கு குற்றவாளிகளான தம்பதிகள் இறக்கும் வரை கற்களை எரிந்து அடிக்கும் வழக்கம் உள்ளது.
பாகிஸ்தான்: இங்குள்ள ஹூதூத் கட்டளைச் சட்டத்தின்படி, விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிடலாம். ஆனால், இதுவரை சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம், திருமணமாகாதவர்கள் உடலுறவில் ஈடுபட்டால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை.
எகிப்து: எகிப்து ஒரு இஸ்லாமிய நாடு என்பதாலும், இஸ்லாமிய சட்டம் இங்கு அமலில் உள்ளதாலும் இங்குள்ளவர்களும் திருமணத்திற்கு முன் உறவுகொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு செய்வது குற்றமாக கருதப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில், தோஹா சலா என்ற தொலைக்காட்சி தொகுப்பாளர், திருமணத்திற்கு முன் உறவு பற்றி டிவியில் விவாதித்தார், அதன் பிறகு அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.43 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Read more: நிகிதா ரூ.25 லட்சம் மோசடி செய்தது அம்பலம்.. அஜித் மரண வழக்கில் எழும் பல கேள்விகள்.. ஆனால் பதில்..?