எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பேச்சு உண்மைக்கு மாறானது.. முதல்வர் பேச்சுக்கு என்ன ஆதாரம் உள்ளது..? சட்டப்பேரவையை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர் விஜய்.. சட்டப்பேரவையில் தவறான தகவலை முதல்வர் விஜய் பேசி உள்ளார்.. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும்.. முதல்வர் விஜய் ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். ஸ்க்ரிப்டை பேசி முடிக்கும் வரை யாரும் குறுக்கிடக் கூடாது என்கிறார்.
என்ன நடந்தாலும் திமுக மீது பழிபோடுதையே தவெக அரசு வழக்கமாக வைத்துள்ளதுள்ளது.. பரப்புரையில் பேசுவது போல் சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசுகிறார்.. ஜனாதிபதிக்கு தனி புரோட்டோகால் உள்ளது.. அது ஆளுநருக்கு கிடையாது.. ஜனாதிபதி நடைமுறை குறித்து முதல்வர் விஜய்க்கு தெரியவில்லை..
எந்தவொரு கேள்விக்கும் முதல்வரிடம் தெளிவான பதில் இல்லை.. மின்வெட்டு பிரச்சனையை சரி செய்ய முதல்வரிடம் கேட்கிறது தவெக அரசு.. அதிலும் திமுக மீது பழிபோடுகிறது.. விவசாயிகள் போராட்டத்தை திமுக தூண்டிவிடுவதாக கூறி விவசாயிகளை கொச்சைப்படுகிறார் விஜய்.. மீண்டும் மீண்டும் அவகாசம் கேட்டுக் கொண்டே முதல்வர் இருக்கிறார்..
திமுக ஆட்சியில் நிரந்தர டிஜிபி இல்லை என்று கூறும் விஜய், 40 நாட்களில் டிஜிபியை நியமிக்காதது ஏன்..? ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்..
தவெக ஆட்சிக்கு வந்த 40 நாட்களில் காவல்துறையினர் என்ன செய்தனர்..? தமிழ்நாடு சட்டப்பேரவை சினிமா தியேட்டர் போல் ஆகிவிட்டது.. முதல்வரின் 30 நிமிடப் பேச்சு ஒரு 10 ரீல்ஸ் தேறும்.. சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காகவே சட்டமன்றத்தில் முதல்வர் பேசி உள்ளார். யார் தயவிலும் தவெக ஆட்சி இல்லை என்று கூறும் முதல்வர் அதிமுகவின் ஒரு பிரிவினரை சந்தித்தது ஏன்..? பொதுக்கூட்ட மேடை போல சட்டப்பேரவையில் முதல்வர் பேசுகிறார்..
தமிழ்நாடு சட்டப்பேரவை சினிமா தியேட்டர் போல் ஆகிவிட்டது.. பத்திரிகையாளர்களே கண்டாலே முதல்வர் விஜய் ஓடுகிறார்.. சட்டப்பேரவையில் சினிமா ஷூட்டிங், இயக்குனராக சபாநாயகர், உதவி இயக்குனர்களாக அமைச்சர்கள் உள்ளனர்.. 2 நாட்களாக ஒத்திகை பார்த்துவிட்டு வந்து சட்டமன்றத்தில் பேசுகிறார். ஆடியோ, ட்ரெயலர், லாஞ்ச் போல் சட்டப்பேரவையில் பேசி உள்ளார்.. நான் முதல்வன், பயிர்க்கடன், 6 சிலிண்டர், மகளிர் உரிமை தொகை என எதைப்பற்றியும் முதல்வர் பதில் கூறவில்லை..” என்று தெரிவித்தார்..



