பலருக்கும் வெளியே செல்லும் போது தலையில் இருக்கும் பொடிகை கண்டாலே சிலர் முகம் சுளிப்பதுண்டு. இதனை சரிசெய்ய பலரும் பலவற்றை கையாண்டு பார்பார்கள். ஆனால் அவையே சிலருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதனை சரிசெய்ய வீட்டில் செய்யக்கூடிய ஒரு ஹேர் மாஸ்க்கைப் பற்றி இங்கே அறிவோம்.
செய்முறைகள்: ஒரு பாத்திரத்தில் 3 டீஸ்பூன் அளவு தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் அரை டீஸ்பூன் அளவு திரிபலா என்ற சூரணத்தை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.பிறகு இந்த கலவையினை எடுத்து உச்சந்தலை மற்றும் முடியிலும் நன்கு தடவி, 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.அதன் பின்னர் தலைமுடியை வெது வெதுப்பான நீரில் லேசான ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை என 2 முதல் 3 மாதங்கள் பயன்படுத்தி வரலாம்.
தயிரில் , புரதம் நிறைந்த சத்துக்கள் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தை வழங்குகிறது. மேலும் முடியின் வேர்களை வலுப்படுத்தவும் மற்றும் முடி உதிர்வைக் குறைக்கவும் உதவுகிறது.