இறைச்சி உணவை தவிர்க்கும் பல சைவ பிரியர்களுக்கு முருங்கை சிறந்த உணவாக கருதப்படுகிறது. முருங்கையில் முருங்கை பூ, முருங்கை இலை மற்றும் முருங்கை காய் என எல்லாவற்றிலும் சத்துகள் நிறைந்துள்ளது. முருங்கையில் இருக்கும் சில பலன்களை பற்றி இங்கே காணலாம்.
முருங்கையில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் என்ற இரசாயன பொருளானது உடலின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்துடன் இது, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை சேர்த்தே கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் இருந்த பரவும் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.
இந்த கால கட்டத்தில் சத்தான உணவு வகைகளை மறந்து விடுகிறார்கள். அதனாலே பலருக்கு இரத்த சோகை நோய் இருக்கிறது. முருங்கையில் முக்கியமாக இரும்புச் சத்து அடங்கி உள்ளது. எனவே முருங்கை உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்கிறது.
மேலும் பலருக்கும் வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில், முருங்கை காய் மற்றும் கீரையையும் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்று உபாதைகளான அஜீரணம், மலச்சிக்கல், மற்றும் வயிற்று வலி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.
முருங்கையில் தாதுக்கள், புரதங்கள், அமினோ அமிலங்கள் இருக்கின்ற நிலையில், இவை நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு நன்மை தரும வகையில் அவற்றின் திசுக்களைப் பாதுகாக்கிறது.