fbpx

பப்பாளி பழத்தை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் நிகழும் மாற்றங்கள்.. என்னென்ன தெரியுமா.?!

பொதுவாக பழங்கள் என்றாலே அவை நம் உடலுக்கு பல வகையான சத்துக்களை தருபவையாக இருக்கின்றன. நம் உடலில் ஏற்படும் நோய் பாதிப்புகளை ஒரு சில பழங்களை உண்பதன் மூலம் சரி செய்யலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பப்பாளி பழம் உண்பதனால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் பப்பாளியை தேனில் கலந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் ஒரு சில நோய்களுக்கு தீர்வை தரும். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

1. நரம்பு தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளியை தேனுடன் சேர்த்து சாப்பிடும் போது நரம்பு தளர்ச்சி படிப்படியாக குறையும்.

2. பப்பாளி பழத்தை தேனுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பேசியல் செய்தால் முகச்சுருக்கம், முகத்தில் ஏற்படும் பரு போன்ற பிரச்சனைகளை சரி செய்யலாம்.

3. குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை தேன்  சேர்த்து அடிக்கடி உணவில் கொடுப்பதனால் பல் உறுதி மற்றும் எலும்பு வளர்ச்சி அதிகரிக்கும். சளி, இருமல் போன்ற தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம்.

இவ்வாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பப்பாளியை தேனுடன் சேர்த்து சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கான தீர்வு கிடைக்கும்.

Baskar

Next Post

4 மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...! 3 இடத்தில் பள்ளி மட்டும் லீவ்...!

Mon Jan 8 , 2024
கன மழை காரணமாக இன்று பல்வேறு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் வட்டங்களுக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று அறிவித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதே போல கனமழை பெய்து வருவதால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. காரைக்காலில் […]

You May Like