உயர் இரத்த அழுத்தம் மற்றும் தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கு எலுமிச்சை சாறு பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து எலுமிச்சை சாறு குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
எலுமிச்சம் பழச்சாற்றில் தேன் கலந்து குடிப்பதால் கல்லீரல் பிரச்சனைகள் குணமாகி கல்லீரல் வலுவடையும். எலுமிச்சம் பழச்சாறு, சீரகம், மிளகு சேர்த்துக் குடித்தால் பித்தம் குறையும். தினமும் எலுமிச்சை சாற்றை உடலில் தேய்த்து குளித்தால், சரும வறட்சி நீங்கும். எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது, இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்க உதவுகிறது. இது மூக்கடைப்பு மற்றும் மூல நோய் போன்ற நிலைகளில் இரத்த ஓட்டத்தை நிறுத்த உதவுகிறது.
எலுமிச்சம் பழச்சாறு உயர் இரத்த அழுத்தம் மற்றும் தலைசுற்றல் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் இது வெப்பத்தை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது.