fbpx

மூல நோய்க்கு தீர்வளிக்கும் லிச்சி பழம்..!

லிச்சி பழம் நம் உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய நிறைய காரணிகளை கொண்டுள்ளது. லிச்சி பழமானது அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து இருப்பதால் எடை குறைப்புக்கு சிறந்த வகையில் உதவி புரிகிறது.

லிச்சி பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், உணவு செரிமானத்திற்கும் மூலநோய்க்கும் நல்ல தீர்வாக இருக்கிறது. லிச்சி பழத்தில் வைட்டமின் சி மற்றும் எல் இருக்கிறது. மேலும் அதிக ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களைக் கொண்டுள்ளதால், இவை நாள்பட்ட நோய்களை போக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகின்றன.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மருத்துவர்கள் உணவில் பொட்டாசியம் சேர்த்துக் கொள்ள பரிந்துரை செய்கிறார்கள். பொட்டாசியத்தின் ஒரு சிறந்த மூலமாக லிச்சி பழம் விளங்குகிறது.

லிச்சியில் இருக்கக்கூடிய தாமிரம் கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த பழம் பழமுதிர் சோலைகளிலும், சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கின்றன. இதை பழமாகவோ, ஜூஸாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

Baskar

Next Post

பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கும் அரசு...! எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா...?

Fri Dec 23 , 2022
தமிழக அரசின் சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ முதலமைச்சரின்‌ பெண்‌ சூழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம். சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ முதலமைச்சரின்‌ பெண்‌ குழந்தை பாதுகாப்பு திட்டத்தில்‌ பயன்பெற ஒரு பெண்‌ குழந்தை அல்லது இரண்டு பெண்குழந்தையுடன்‌ கணவனோ, அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்‌. இரண்டாவது பெண்‌ குழந்தை பிறந்து 3 […]

You May Like