உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால் உடலில் பல பிரச்சனைகள் வரக் கூடும். ஆனால் இவ்வாறு இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதற்கு நீரிழிவு, தமனிகளில் அடைப்பு, நரம்புகளின் வீக்கம், குறைந்த ஆக்ஸிஜன் சப்ளை, உடல் பருமன், இதயம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இரத்த ஓட்டத்தைத் தடுக்கின்றன.
க்ரீன் டீ அல்லது பிளாக் டீயை உட்கொண்டால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த முடியும். டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் உடலில் உள்ள இரத்த நாளங்களின் அகலத்தை அதிகரிக்கிறது.
சாலடுகள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இந்த உணவுகள் பார்த்துக் கொள்கிறது. வெந்தயம், கேரட், மாதுளை, அத்திப்பழம், பீட்ரூட் மற்றும் கீரை போன்ற பச்சைக் காய்கறிகளையும் தொடர்ந்து உண்டு வரலாம்.