இறைச்சி உணவிலும் மற்றும் பல சமையல்களில் சுவையை கூட்டுவது இந்த இஞ்சி பூண்டு விழுது தான். இஞ்சி பூண்டு விழுதானது தற்போது பாக்கெட்டுகளில் இருப்பதை வாங்கி உபயோகித்து வருகிறோம்.
ஆனால் வீட்டிலேயே அரைத்து அதனை சமையலுக்கு உபயோகிப்பது தான் சமையலுக்கு உண்டான கூடுதல் ருசியை தருவதோடு உடலுக்கு மிகவும் சிறந்தது.
தற்போது காலகட்டத்தில் ரெடிமேடாக இருக்கிறது என்று பாக்கெட்டுகளில் இருக்கும் இஞ்சி பூண்டு விழுதை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் என்னென்ன பாதிப்புகள் வருமென்று பார்க்கலாமா?
கேன்சர் கட்டியுடைய ஒரு நபரை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர் அப்போது அதில் பியூரிட்டான் என்ற வேதியியல் கூறுகள் இருந்ததை அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் விவசாயிகள் அவர்கள் நிலத்திற்கு பயன்படுத்தும் ஒரு பொருள் ஆகும்.
இந்த மூலக்கூறானது மண்ணில் கரைய கிட்டதட்ட ஐந்து ஆண்டுகள் எடுத்து கொள்கிறது. இதனால் விவசாயிகள் இஞ்சிக்கு அடிக்கும் இந்த மருந்துகள் அப்படியே அதனுள் சேர்ந்து விடுகிறது.இவ்வாறு இருக்கும் நிலையில் இஞ்சி சுத்தம் செய்யாமல் சமையலுக்கு உபயோகிக்க கூடாது.
அவ்வாறு உபயோகித்தால் நமக்கு விஷமாக மாறும் அளவிற்கு ஆபத்தானது. வீட்டுல் நாம் உபயோகிக்கும் இஞ்சியை தோல் சீவி பயன்படுத்தி வருகிறோம். ஆனால் கடைகளில் இருக்கும் பாக்கெட்டில் விற்கப்படும் இஞ்சி தோளினை நீக்குவதில்லை.