fbpx

மது அருந்திவிட்டு இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடுறீங்களா..? உயிருக்கே ஆபத்தாக மாறும்..!! இனியும் இந்த தவறை செய்யாதீங்க..!!

மது அருந்துபவர்கள், மதுவுடன் சில உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். அப்படி எடுத்துக் கொள்ளப்படும் சில உணவுகள் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மது அருந்தும்போது என்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

வயிறு என்பது மிகவும் சென்சிட்டிவான பகுதி. நாம் உண்ணும் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் எடுத்துச் செல்வதில் வயிறு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மது அருந்திய பின், உணவுகள் ஏற்புடையதாக இல்லாமல் இருந்தால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக, இரவு நேரங்களில் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இன்னும் கூடுதலாக உணவைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

மது பிரியர்கள் அதிகமாக இருந்து வரும் நிலையில், மது அருந்தும் போது சில உணவுகளை சேர்த்து உண்ணும் போது அதனால் பல மோசங்கள் உடலுக்கு உண்டாகின்றன. மது அருந்தும் போது பால் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி மது அருந்தும் போது, ​​வயிற்றின் பகுதிகளில் வெகுவாக எரிச்சலடைய செய்கிறது. எனவே மது அருந்திய பிறகும், அதற்கு முன்பும் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

பீட்சா பலருக்கும் மிகவும் விருப்பமான உணவாக இருக்கலாம். ஆனால் இது காலப்போக்கில் செரிமான ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். முக்கியமாக பீட்சாவை தூங்குவதற்கு முன் சிற்றுண்டியாக எடுத்து கொண்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடலாம். டார்க் சாக்லேட் சாப்பிடுவது சில ஆரோக்கிய பலன்களை அளித்தாலும், அதனை மதுவுடன் சேர்த்து உண்ணும் போது அதனால் ஏற்படும் பக்க விளைவுகளே அதிகமாக இருக்கும். சாக்லேட்டில் உள்ள கோகோ, கொழுப்பு மற்றும் காஃபின் ஆகியவை இரைப்பை குடல் பிரச்சினைகளைத் தூண்டுகிறது. 

Read More : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! திமுகவுடன் நேரடியாக களம் காணும் நாம் தமிழர்..!! வெற்றி வாய்ப்பு அதிகமாம்..!!

English Summary

Here we will look at what kinds of foods to avoid when drinking alcohol.

Chella

Next Post

சிறுநீரக பிரச்சனை முதல் ஆண்மை கோளாறுகள் வரை..!! புடலங்காயில் ஒளிந்திருக்கும் நன்மைகள்..!! இனியும் தவிர்க்காதீங்க..!!

Tue Jan 14 , 2025
If there is one fruit that can protect all three of these organs - the liver, kidneys, and nerves - it is the bitter melon.

You May Like