உங்கள் இரத்த நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்திருந்தால் கவலைப்படத் தேவையில்லை, உணவில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதை சரிசெய்யலாம். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. சரியான நேரத்தில் உணவு உண்ணாததாலும், ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்துவதாலும் பல நோய்கள் உருவாகின்றன. உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற தீவிர நோய்களை உருவாக்கும் அபாயமும் உள்ளது. இந்த தீவிர நோய்களில் கொலஸ்ட்ராலும் சேர்க்கப்பட்டுள்ளது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது.
முதலில் நல்ல கொலஸ்ட்ரால், இரண்டாவது கெட்ட கொலஸ்ட்ரால். கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருள். இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. அதிகப்படியான புகைபிடித்தல், தவறான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை மற்றும் ஏற்கனவே இருக்கும் நோய் உள்ளிட்ட பல காரணங்களால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம்.. இருந்தாலும். சில காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும், இந்த பிரச்சனைகளை எளிதில் தவிர்க்கலாம்.
இந்த 6 காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுப்படும். அதன்படி, கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் வெண்டைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அடிக்கடி உங்கள் உணவில் வெண்டைக்காயை சேர்ந்துக் கொள்ளுங்கள். அதே போல், ஓட்ஸ்.. ஓட்ஸில் உள்ள ஜெல் போன்ற பொருள், கொலஸ்ட்ராலை எளிதாக வெளியேற்ற உதவுகிறது என்று நம்பப்படுகிறது.
இது தவிர, உங்கள் உணவில் பீன்ஸையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவும் குறையும். மேலும் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. சாலட், காய்கறிகள் போன்றவற்றில் கலந்து சாப்பிடலாம்.
பூண்டு சாப்பிடுவதால் அதிக கொலஸ்ட்ரால் அளவும் கட்டுக்குள் இருக்கும். பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது, இது பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவது மட்டுமின்றி, இரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பின் அளவையும் குறைக்க உதவுகிறது.
இது தவிர கத்திரிக்காய், தக்காளி போன்றவையும் அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. இந்த கெட்ட கொலஸ்ட்ராலை உங்கள் உடலில் இருந்து வெளியேற்ற வேண்டுமானால், தக்காளி மற்றும் கத்தரிக்காயை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.