fbpx

உடல் எடையை குறைக்கனுமா.. முட்டைக் கோஸ் ட்ரை பண்ணுங்க..! 

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் உடல் பருமன் என்பது அனைவரையும் பாதிக்கும் பிரச்சனையாக மாறியுள்ளது. எதையும் சாப்பிட்டால் பித்தம் தீரும் என்பது பழமொழி. இதேபோல் பலர் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். 

அதிக நேரம் உடற்பயிற்சி செய்யவோ அல்லது ஜிம்முக்கு செல்வதற்கோ நேரம் இல்லாதவர்கள் சில உணவுமுறை மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க முயற்சி செய்யலாம். இதில் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க ஒரு வழியைக் காண்பீர்கள். 

இந்த காய்கறியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் கார்சினோஜென்களைத் தடுக்கவும் அகற்றவும் உதவும் கலவைகள் நிறைந்துள்ளன. புற்றுநோயானது கார்சினோஜென்ஸ் என்று அழைக்கப்படும் காரணிகளால் ஏற்படுகிறது.

இந்த காய்கறியில் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். இது கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவும். இந்த காய்கறியை உட்கொள்வதன் மூலம் எடையை கட்டுப்படுத்தலாம். முட்டைக்கோஸை ஆரோக்கியமான முறையில் உட்கொள்வது எவ்வாறு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

முட்டைக்கோஸ் அதிக நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த காய்கறி ஆகும், இது மலச்சிக்கலை குணப்படுத்தவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், குடல் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். கூடுதலாக, எடை குறைக்க விரும்புவோருக்கு முட்டைக்கோஸ் ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும்.

Baskar

Next Post

இலங்கையிடம் போராடி தோல்வி பெற்றது இந்தியா..!! தெறிக்கவிட்ட பேட்ஸ்மேன்கள்..!!

Fri Jan 6 , 2023
இந்தியா-இலங்கைக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் இந்தியா போராடி தோல்வியை தழுவியது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டி புனே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, […]
இலங்கையிடம் போராடி தோல்வி பெற்றது இந்தியா..!! தெறிக்கவிட்ட பேட்ஸ்மேன்கள்..!!

You May Like