fbpx

அதிகாலையிலேயே எழுவதால் இதய நோய் வராதா..? அடடே இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இனி நீங்களும் டிரை பண்ணி பாருங்க..!!

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரும் இரவு நேரங்களில் தாமதமாக தூங்கி, பகலில் தாமதமாக எழுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், இது மிகவும் தவறான பழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இது உடல் நலத்தையும், மனநலத்தையும் மிகவும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இரவில் சீக்கிரமாக தூங்கி அதிகாலையில் எழுபவருக்கு உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்று ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான 3 முதல் 5 மணிக்குள் எழுந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

1. அதிகாலையில் சூரிய ஒளி நம் உடலில் படும்போது வைட்டமின் டி சத்து நம் உடலுக்கு கிடைப்பதோடு, உடல் சுறுசுறுப்பாகவும் இருக்க வைக்கிறது.

2. அதிகாலை நேரத்தில் எழுபவருக்கு மன அழுத்தம் ஏற்படுவது மிகவும் குறைவு.

3. அதிகாலையில் எழும்போது மூளை, இதயம் என அனைத்து உறுப்புகளும் சீராக செயல்பட்டு மன அமைதியை தரும்.

4. மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிக்கும்போது மூளை சுறுசுறுப்பாக இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

5. குறிப்பாக மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் நம் உடலில் அதிகாலை நேரத்தில் அதிகமாக உருவாகுவதால் அன்றைய நாள் முழுவதும் நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

6. அதிகாலை எழுவதால், உங்களுக்கு வழக்கமான வேலைகளை துவங்குவதற்கு முன்பு போதுமான அளவு நேரம் கிடைக்கும்.

7. தொடர்ச்சியாக அதிகாலை எழுவதற்கு பழக்கப்படுத்திக் கொண்டால், உங்கள் உடலின் உட்புற கடிகாரமும் அதற்கு ஏற்றவாறு தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளும்.

8. அதிகாலையில் நீங்கள் உடற்பயிற்சியோடு ஆரம்பிக்கும்போது, உங்கள் ஆற்றல் அளவு, மனநிலை போன்றவை மேம்படும்.

9. இதய ஆரோக்கியம், உடல் எடை போன்றவை மேம்படுவதோடு நாள்பட்ட நோய்களுக்கான அபாயத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

10. அதிகாலையில் சுய ஒழுக்கத்தை பின்பற்ற தொடங்கிவிட்டால், உங்களுக்கு சுய கட்டுப்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள் மற்றும் நடவடிக்கைகள் மீதான சிறந்த கட்டுப்பாட்டை பெறுவீர்கள். 

Read More : 3 மாதங்களில் 15% உயர்ந்த தங்கம் விலை..!! என்ன காரணம்..? வரும் நாட்களில் எப்படி இருக்கும்..? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!


English Summary

When sunlight hits our bodies in the early morning, it provides our bodies with vitamin D and keeps us active.

Chella

Next Post

டுவிஸ்ட்...! தமிழக பா.ஜ.க. தலைவர் நியமனம்... டெல்லியில் வரும் 9-ம் தேதி ஆலோசனை...!

Wed Apr 2 , 2025
Tamil Nadu BJP President Appointment... Consultation to be held in Delhi on the 9th

You May Like