fbpx

மன அழுத்தத்தை போக்க, இந்த 4 உணவை மட்டும் சாப்பிட்டால் போதும்..!

மன அழுத்தம் என்பது நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாதாரணமாக தாக்கும் மனம் சம்பந்தப்பட்ட நோயாகும். ஒரு சில உணவுகளை உண்பதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

பொதுவாக விடுமுறை காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களிற்கு பின்பு ஒரு சிலருக்கு அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும். இப்படியான மன அழுத்தத்திற்கு சரியான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது. அவை என்னென்ன உணவுகள் என்பதை குறித்து பார்க்கலாம்

1. பீட்ரூட் – இது உடலில் ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனை ஜூஸ்ஸாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு மன அழுத்தம் குறையும்.

2. ப்ளூபெர்ரி – ப்ளூபெர்ரியை ஜூஸாகவோ, அல்லது ஓட்ஸ் போன்ற உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம். இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூளையின் வளர்ச்சியை அதிகப்படுத்தி மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

3. வெண்ணெய் – நம் உடலில் உள்ள ஹார்மோன்களை சீராக்கும் கொழுப்பு சத்து வெண்ணையில் நிறைந்துள்ளதால் வெண்ணெய் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

4. மாதுளை – மன அழுத்தத்தின் போது உடல் மிகவும் சோர்வாக இருக்கும். அந்த நேரத்தில் மாதுளையை ஜூஸாகவோ, சாலடாகவோ உண்டு வந்தால் மன அழுத்தத்தை போக்கும். இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மனநலத்தையும், உடல் நலத்தையும் காக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

தமிழகமே...! திட்டமிட்டபடி இன்று போக்குவரத்து வேலை நிறுத்த போராட்டம்...!

Tue Jan 9 , 2024
திட்டமிட்டபடி இன்று போக்குவரத்து வேலை நிறுத்த போராட்டம் தொடரும். போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். மேலும் ஓய்வூதியர்களின் பஞ்சப்படி நிலுவையை வழங்க வேண்டும் என 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், […]

You May Like