fbpx

சிறுநீரக பிரச்சனை முதல் ஆண்மை கோளாறுகள் வரை..!! புடலங்காயில் ஒளிந்திருக்கும் நன்மைகள்..!! இனியும் தவிர்க்காதீங்க..!!

கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நரம்புகள் இந்த மூன்றையுமே காக்கக்கூடிய ஒரு காய் உண்டென்றால் அது புடலங்காய்தான். அப்படியென்ன சத்துக்கள் இதில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வீட்டிலே வளர்க்கும் காய்கறிகளில் புடலங்காயும் ஒன்று. இது ஆண்களுக்கு மிக அவசியமான ஒன்றாக முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த காயினை உண்டு வந்தால் ஆண்மை கோளாறுகள் குறையும். 

இது மட்டும் அல்லாமல் வயிற்று புண் மற்றும் தொண்டை புண் உள்ளவர்களுக்கும் புடலங்காய் பெரிய பலன்களை தருகிறது. மேலும், பாதிப்பையும் பெருமளவு குறைக்கிறது. புடலங்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. உடல் எடையை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது. மேலும் அஜீரண கோளாறு உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்து வருவதால் எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்குகிறது. மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல ஒரு மருந்தாக செயல்படுகிறது. 

அத்துடன் நரம்புகளுக்கு புத்துணர்வை அளித்து, ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தி கருப்பைக் கோளாறுகளையும் சரி செய்கிறது. கண் பார்வையின் திறனை அதிகரிக்கச் செய்கிறது. நரம்புகளின் சிறப்பான செயல்பாடுகளுக்கு இந்த புடலங்காய் நல்லது. வைட்டமின் B6 இந்த காயில் உள்ளதால், மூளையின் செயல்பாடுகளை சீராக்கி, நரம்பு தூண்டுதல்களையும் மேம்படுத்துகிறது. இதனால் மன அழுத்தம், மன பதட்டம் ஆகியவற்றை தணிகிறது.

கல்லீரலின் காவலன் என்று கீழாநெல்லி இலைகளை சொல்வோம். அதுபோலவே, கல்லீரலுக்கு இந்த புடலங்காய்களும் உதவும். மஞ்சள் காமாலையின்போது, புடலங்காய் இலைகளையும், புடலங்காய்களையும் மருந்தாக தருவார்கள். அதாவது, மல்லி விதைகளுடன், இந்த புடலங்காய் இலையையும் சேர்த்து வைத்து நசுக்கி, அதன் சாறை மட்டும் மருந்தாக தருவார்கள். இதனால், காமாலை குறைந்து கல்லீரல் பலப்படும். மேலும், சிறுநீரகத்துக்கு இந்த புடலங்காய் கவசம் போன்றது. பொதுவாக நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் சிறுநீரகத்தை தாராளமாக பிரித்து வெளியேற்ற உதவும்.

Read More : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! திமுகவுடன் நேரடியாக களம் காணும் நாம் தமிழர்..!! வெற்றி வாய்ப்பு அதிகமாம்..!!

English Summary

If there is one fruit that can protect all three of these organs – the liver, kidneys, and nerves – it is the bitter melon.

Chella

Next Post

இனி எந்த வைரஸ் பரவினாலும் பயம் வேண்டாம், இந்த தேநீரை தினமும் குடித்தால் போதும்.. டாக்டர் சிவராமன் அட்வைஸ்..

Tue Jan 14 , 2025
best tea to drink everyday for healthy lifestyle

You May Like