fbpx

நரம்பு தளர்ச்சி முதல் ஆண்மை குறைபாடு வரை..!! முருங்கையின் அற்புத பலன்கள் பற்றி தெரியுமா..?

பொதுவாக காய்கறிகளில் முருங்கைக்காய் என்பது மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த காயாக கருதப்பட்டு வருகிறது. நம் முன்னோர்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் உயிர் வாழ்ந்ததற்கு முருங்கைக்காயும், முருங்கைக் கீரையும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. “முருங்கையை நொறுங்க தின்றால் முன்னூறும் போகும்” என்பது நம் முன்னோர்களின் பழமொழி.

இதற்கேற்றார் போல் முருங்கை காய் மற்றும் கீரையை நன்றாக கடித்து சாப்பிடும் போது 300 வகையான நோய்களும் நம் உடலை விட்டு நீங்கும் என்று அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். முருங்கைக்கீரை மற்றும் முருங்கை காயில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், தாமிரம் போன்ற உடலுக்கு தேவையான பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

கீரைகளிலேயே இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் கீரை முருங்கைக்கீரை மட்டும்தான். எனவே, இந்த கீரையை அடிக்கடி சாப்பிடும் போது ரத்தத்தில் இரும்பு சத்து அதிகமாகி உடல் வலுப்பெறும். இதனால் நரம்பு தளர்ச்சி, நரம்புகளில் வீக்கம், ஆண்மை குறைபாடு, போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது. குறிப்பாக விந்தணுக்களில் உயிரணுவை அதிகரித்து குழந்தையின்மை பிரச்சனையை தீர்க்கிறது.

மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக இருந்து வருகிறது. உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் குறையும். ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைப்பதால் இதய நோய் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது. இவ்வாறு தலை முதல் கால் வரை பல்வேறு நன்மைகளை தரக்கூடிய முருங்கைக்கீரை மற்றும் முருங்கைக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் நோயற்ற வாழ்வை வாழலாம்.

Read More : சென்னை IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு..!! ரசிகர்களுக்கு கட்டுப்பாடு..!! மெட்ரோ ரயிலில் இலவச பயணம்..!!

Chella

Next Post

நாக்பூர் வன்முறை!. மும்பையில் உச்சக்கட்ட எச்சரிக்கை!. நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு!

Tue Mar 18 , 2025
Nagpur violence!. Mumbai on high alert!. Heavy security across the city!

You May Like