இந்த காலத்தில், சொத்து சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, ஆரோக்கியமான வாழ்கையை வாழ்ந்தாலே போதும் என்ற நிலை தான் உள்ளது. அந்த வகையில் நாம் ஆரோக்கியமாக வாழ நினைத்தால் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் பாக்கெட் மற்றும் ஜங்க் ஃபுட் ஆகியவற்றை நாம் மறந்து விட வேண்டும். அதற்காக நாம் பசியோடு பட்னியாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.
அது மட்டும் இல்லாமல், அதிக விலை கொடுத்து காஸ்ட்லி உணவுகள் சாப்பிட வேண்டிய அவசியமும் இல்லை. நாம் அனுதினம் சாப்பிடும் உணவை சத்தானதாக மற்றிகொண்டாலே போதும். அதாவது, காலையில் இட்லி தோசை மட்டுமே சாப்பிடாமல் ஒரு நாள் சுண்டல், பயிறு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். காலையில் நாம் என்ன சாப்பிட்டாலும், குடித்தாலும் அது நம் உடல் ஆரோக்கியத்தில் சில குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.
பொதுவாக நாம் காலையில் குடிக்கும் டீ அல்லது காபிக்கு பதில், மூலிகை நீரை குடிப்பதும் நன்மை பயக்கும். அதிலும் குறிப்பாக, கொத்தமலி நீரை குடிப்பதால் உடலில் பல விதமான ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும். ஆம், அந்த வகையில் கொத்தமல்லி விதை நீரை காலையில் குடிப்பாதல் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கொத்தமல்லி விதைகளில், ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால் இது உடலை குளிர்விக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் இந்த கொத்தமல்லி நீரை குடிக்கலாம். மேலும், இந்த நீரை குடிபதால் தைராய்டு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
- சர்க்கரை நோயாளிகள் காலையில் குடிக்கும் டீ அல்லது காபியை தவிர்த்து விட்டு, இந்த நீரை குடித்தால் கட்டாயம் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். தோல் சம்மந்தமான எந்த பிரச்சனையாக இருந்தாலும், கொத்தமல்லி நீரை குடித்து வந்தால் குணமாகும். கொத்தமல்லி நீரை தினமும் குடித்து வந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொத்தமல்லி விதைகளில், வைட்டமின்கள் ஏ, சி, கே, இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளது.
கொத்தமல்லி தண்ணீரை தயாரிக்க, முதலில் ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை எடுத்து, இரண்டு கப் தண்ணீரில் போடவும். 5 நிமிடங்கள் இதை கொதிக்க வைத்து குளிர வைத்தால் கொத்தமல்லி மூலிகை நீர் தயார்..
Read more: வாரம் 2 முறை இதை சாப்பிடுங்க, இடுப்பு வலி மட்டும் இல்ல, எந்த வலியும் வராது!!!