fbpx

உடலின் மொத்த பாரத்தையும் தாங்கும் நம் பாதங்களை எவ்வாறு பாதுகாப்பது?

உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது நமது பாதங்கள். ஒரு மனிதன் வாழ் நாளில் 150,000 மைல்களை விட அதிகமாக நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது 5 முறை உலகம் முழுதும் சுற்றுவதற்கு சமம். இந்த அளவுக்கு ஆற்றல் புரியும் நமது பாதங்களை நாம் காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை வறண்ட பாதங்கள் மற்றும் பாத எரிச்சல் வலி ஆகியவை. ரசாயனங்களால் ஏற்படும் அலர்ஜி, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய்க்காக கீமோதெரபி எடுப்பதால், முடக்குவாதம் போன்ற பல காரணங்களாலும் பாதத்தில் எரிச்சல் மற்றும் வலி வரலாம். ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டாலும் பாத எரிச்சல், வலி உண்டாகும்.

பாதங்களை பாதுகாக்க என்ன வழி?

● தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும். பாதத்தை அடிக்கடி உயர்த்துவது, நின்று கொண்டிருப்பது, கால்களை நீட்டுவது, நடப்பது ஆகிய உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் பாதத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம்

● கால் வலியை புறக்கணிக்காதீர்கள். பெண்கள் உள்ளங்காலில் வலி ஏற்படுவது மாதவிடாய் பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம். பாதங்களில் வியர்வை சுரப்பிகள் இருப்பதால் வியர்த்த பாதங்களில் செருப்பு அணியக்கூடாது.

●மருதாணியில் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு அரைத்து அதை பாதத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து பாதத்தை சுத்தம்செய்து வந்தால் பாதஎரிச்சல் குறையும்.
மஞ்சளில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியைக் குறைக்க உதவும்.

● 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து குழைத்து, எரிச்சல் உணர்வு உள்ள பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

● உறங்கும் முன் வெந்நீரில் சிறிது உப்பு கலந்து அதில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டும். பின் சுத்தமான தேங்காய் எண்ணெயை காலில் தடவினால் எரிச்சல் போகும்.
நரம்பு சார்ந்த பிரச்னைகளாலும் பாத எரிச்சல் ஏற்படும். எனவே, தாங்க முடியாத பாத எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

Kokila

Next Post

தமிழக அரசின் கல்வி உதவித்தொகை..!! இன்று முதல் தொடக்கம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!!

Mon Dec 26 , 2022
மத்திய அரசு சார்பில் பீடி, சுண்ணாம்புக் கல், டோலமைட், சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் முதல் வரவேற்கப்பட்டது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் நடப்பாண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 9ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை […]
தமிழக அரசின் கல்வி உதவித்தொகை..!! இன்று முதல் தொடக்கம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!!

You May Like