fbpx

ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கணுமா.? இதை மட்டும் பண்ணுங்க போதும்.!?

நவீன காலகட்டத்தில் அன்றாட பழக்கவழக்கத்தினாலும், உணவு முறைகளாலும் பலருக்கும் உடல் எடை அதிகரித்து வருகிறது. உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

ஆனால் முறையான உடற்பயிற்சியினாலும், உணவு கட்டுப்பாட்டினாலும் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும். உணவு கட்டுப்பாட்டில் ஒரு சில முறைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அவை என்னென்ன என்பதை அறியலாம்?

1.காலையில் எழுந்தவுடன் காபி, டீ போன்றவற்றை அருந்தாமல் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் அல்லது தேன் கலந்த சுடு தண்ணீரை குடித்து வரலாம்.

2. பின்னர் காலை உணவாக வேக வைத்த முட்டை அல்லது பாலில் செய்த ஓட்ஸ் போன்றவற்றை உண்ணலாம்.

3. பின்னர் உலர்ந்த பழங்கள்,  நட்ஸ், கீரின் டீ அல்லது சர்க்கரை குறைவான பழச்சாறு ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.

4. மதிய உணவாக ரொட்டி, சப்பாத்தி பிரவுன் அரிசியை சாப்பிடலாம். அரிசி சாப்பாடு உண்பதை முடிந்த அளவு குறைக்க வேண்டும். குறைந்த எண்ணெயில் சமைத்த கீரைகள், காய்கறிகளை உண்ணலாம்.

5. மாலையில் கிரீன் டீ மற்றும் குறிப்பிட்ட அளவு பழங்கள் எடுத்து கொள்ளலாம்.

6. இரவு உணவாக வேகவைத்த காய்கறிகள் சப்பாத்தி, சாலட்கள், தானிய ரொட்டி போன்றவற்றை உண்ணலாம்.

இவ்வாறு உணவு கட்டுப்பாடுகளுடன், உடற்பயிற்சியும் செய்து வந்தால் உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்கலாம்.

Rupa

Next Post

இந்த பொருட்களை எல்லாம் தானமாக கொடுப்பதினால் வரும் நன்மைகள்.? என்னென்ன தெரியுமா.!

Thu Jan 11 , 2024
1. கோயிலுக்கு பணத்தினை தானமாக கொடுத்தால் நீண்ட ஆயுள், நல்ல மனைவி, அறிவுள்ள குழந்தைகள் கிடைப்பார்கள். 2. தங்கத்தினை தானமாக கொடுப்பதன் மூலம் பொருளாதாரம் மேம்பாடு, லக்ஷ்மி கடாக்ஷம் போன்றவை கிடைக்கும். 3. வெள்ளியை தானமாக கொடுப்பதினால் கவலைகள் நீங்கி தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். 4. கருப்பு எள்ளை தானமாக கொடுத்தால் முன்னோர்கள் ஆசிர்வாதம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5. நவதானியத்தை தானமாக கொடுத்தால் உணவு பற்றாக்குறை வராமல் இருக்கும். […]

You May Like