குளிர்காலத்தில் சளி, இருமல் என பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நம் உணவில் சில பொருட்களை நாம் சேர்த்து உண்ணும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாத்துக்க முடியும்.
இவ்வாறு குளிர்காலத்தில் நாம் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய மசாலா பொருட்கள் என்னவென்று என்று இந்த பதிவில் காணலாம். இஞ்சி தேநீர் என்பது ஒரு சிறந்த குடிநீர் பானமாக இருந்து வருகிறது. தேனுடன் இஞ்சியை சேர்த்து சூடான நீரினை பருகி வர தொண்டை வலிக்கு ஒரு இனிமையான பானமாக இருக்கும்.
இலவங்கப்பட்டையில் நல்ல வாசனையை தருகிறது இருந்தாலும் இதில் சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் தொற்று மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.
மேலும் குளிர் காலங்களில் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க இது ஒரு சிறந்த மருந்தாகும்.ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் அளவு இலவங்கப்பட்டை, துருவிய இஞ்சியை எடுத்து அதனுடன் தேனை கலக்கவும். இதனை ஒரு நாளைக்கு இரு முறை எடுத்து வந்தால் நலன் பெறலாம்.