தொப்பை, ஊளைச்சதை, உடல் பருமனால் உள்ளவர்கள் மற்றும் உடல் எடையுடன் கொலஸ்டிராலையும் சேர்த்து குறைப்பதற்கு “முட்டைகோஸ்” ஒன்றாக இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மையான ஒன்று, முட்டைகோஸ் ஜூஸ் செய்து குடித்து வர பலன் பெறலாம்.
தேவையான பொருள்கள்: முட்டைகோஸ் – அரை கப், ஆப்பிள் அல்லது விரும்பிய பழம் – பாதி அளவு, எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, புதினா இலைகள் – 5,
செய்முறை விளக்கம்: முட்டைகோஸினை எடுத்து சுத்தம் செய்து சிறு சிறு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கிய முட்டைகோஸை வெந்நீரில் போட்டு 15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர் ஆறவிட்டு, முட்டைகோஸை மிக்ஸியில் போட்டு அத்துடன் ஆப்பிள் அல்லது வேறு ஏதாவது ஒரு பழத்தினை, துருவிய இஞ்சி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து சிறிதளவு தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த அரைத்த கலவையுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து குடித்து வரலாம். மிக முக்கியமாக இந்த ஜூசினை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.