fbpx

முகம் பளபளப்பாக மாற புதினா இலை உதவுகிறதா..!

பிரியாணி மற்றும் பல சமையல்களில் வாசனையை கூட்டும் புதினா இலைகள் நிறைய மருத்துவங்களும் இருக்கிறது. 

சில புதினா இலையை எடுத்து காய வைத்து தூளாக்கி அந்த பொடியால் பல் தேய்த்தால் வந்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும். சில நேரங்களில் முகம் வறட்சியாக இருக்கும் நிலைமை போக்க, கொத்தமல்லியுடன் புதினாவை  சேர்த்து கெட்டியாக அரைத்து, அதனை முகத்தில் வாரத்திற்கு ஒருமுறை பூசி வருவதால் பலன் கிடைக்கும்.

அடுத்து வெது வெதுப்பான நீரில் துளசி மற்றும் புதினா இலை போட்டு அதனில் 10 நிமிடம் நகங்கள் மூழ்குமாறு வைத்திருந்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.மேலும் புதினா இலைகளின் சாறினை எடுத்து முகத்தில் தடவி வருவதால் முகப்பரு மாறி முகம் பளபளப்பாக தோற்றமளிக்கும்.

இதனை தொடர்ந்து இரவு தூங்குவதற்கு முன்பு புதினா சாறினை எடுத்து அதில் சம அளவில் எலுமிச்சை பழச்சாறினையும்  கலந்து அதனுடன் பச்சை பயிறு மாவை சேர்த்து முகத்தில் பூச வேண்டும். பிறகு பத்து நிமிடம் கழித்து ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தால் முகம் இன்னும் பளபளக்கும்.

Baskar

Next Post

சருமத்தை மிளிரச் செய்யும் குங்குமப்பூ..!

Mon Dec 5 , 2022
குங்குமப்பூவானது சிறந்த சூரிய எதிர்ப்பு முகவராக செயல்படும் தன்மை கொண்டது. மேலும் சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தினை பாதுகாக்கவும் இது உதவுகிறது. இதனால் தான் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் குங்கும பூவினை எடுத்து கொள்வார்கள். அத்துடன் இதில் நிறைந்துள்ள பல அரிய மருத்துவ குணங்களை பார்க்கலாம் வாங்க.  உடலில் இருக்கும் புள்ளிகளை மங்கச் செய்து, உடலின் நிறத்தை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை பிரகாசமாக்குகிறது. […]

You May Like