fbpx

வெயில் காலம் வந்துவிட்டது.! இந்த 5 உணவுகளை கட்டாயமாக சாப்பிட வேண்டும்.!?

சூரியன் சுட்டெரிக்கும் வெயில் காலம் வந்துவிட்டது. பிப்ரவரி மாதம் முடிவதற்குள்ளேயே வெளியில் செல்லவே முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்து விட்டது. இவ்வாறு பருவநிலை மாற்றத்தினால் உடலில் வெப்பம் அதிகரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன.

குறிப்பாக வெயில் காலத்தில் உணவு பழக்க வழக்கங்களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். நாம் உண்ணும் உணவுகள் ஊட்டச்சத்தானதாகவும் அதே நேரத்தில் நம் உடலில் சூட்டை ஏற்படுத்தாத உணவாகவும் இருக்க வேண்டும். இதன்படி வெயில் காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள், காய்கறிகள், பானங்கள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

1. நீர் ஆகாரங்கள் – பொதுவாக கோடை காலங்களில் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இது உடலில் சூட்டு நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் எலுமிச்சை சாறு, இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை அடிக்கடி குடித்து வருவது உடலுக்கு நல்லது.
2. பழங்கள் – கோடைகால சீசன் பழங்களை தர்பூசணி, கிர்ணி போன்ற பல வகைகளை ஜூஸாகவோ அல்லது அப்படியே சாப்பிடலாம். ஆனால் உடலுக்கு சூட்டை ஏற்படுத்தக் கூடிய மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
3. காய்கறிகள் -வெயில் காலத்தில் நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளான சௌசௌ, முட்டைக்கோஸ், சுரைக்காய், புடலங்காய், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும்.
4. அசைவ உணவுகள் – உடலுக்கு சூட்டை ஏற்படுத்தும் பிராய்லர் கோழிக்கறியை அடிக்கடி சாப்பிடாமல் மீன், மட்டன், கடல் உணவுகள் போன்றவற்றை சாப்பிடலாம்.
5. வெந்தயம் மற்றும் சீரகம் – வெந்தயம் மற்றும் சீரகம் இரண்டும் உடலில் நீர் சத்தை அதிகப்படுத்தி குளிர்ச்சியை தரும் மருத்துவ குணம் கொண்டது. இதனை அடிக்கடி உணவிலோ அல்லது தண்ணீரில் ஊற வைத்தோ குடித்து வருவது உடலுக்கு நல்லது.
மேலே குறிப்பிட்ட ஐந்து வகையான உணவுப் பொருட்களை நம் உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வெயில் காலங்களில் நம் உடலில் நோய்கள் ஏற்படுவதை தடுத்து ஆரோக்கியமாக வாழலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

English summary : These foods must be eaten in summer

Read more : இதை தெரிஞ்சுக்கோங்க.? அன்னாசி பல சாறுடன் கசகசாவை கலந்து குடித்து வந்தால்.!?

Rupa

Next Post

Lok Sabha | தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல்..? தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தகவல்..!!

Sat Feb 24 , 2024
லோக்சபா தேர்தலின் போது தமிழ்நாட்டில் பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் கமிஷனர் அருண் கோயல் மற்றும் துணை தேர்தல் கமிஷனர்கள் அடங்கிய குழுவினர் சென்னை வந்தனர். நேற்று இவர்கள், அங்கீகரிக்கப்பட்ட தமிழக கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தனர். இரண்டாவது நாளாக மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த […]

You May Like