நம்மில் பலருக்கும் வறட்டு இருமல் வந்து விட்டால் நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர். தொடர்ந்து இரும்பி கொண்டே இருப்பதால் சிறிது நேரத்திலே தொண்டை பகுதி மற்றும் அடி வயிற்றுகளில் வலி ஏற்படும் அளவிற்கு நிலைமை முடியாமல் போய்விடுகிறது.
தொண்டை பகுதியில் புண் ஏற்படும் அளவிற்கு நிலைமை வந்து விடுகிறது. வறட்டு இருமல் வருவதற்கான காரணங்கள் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும். இதனை சரிசெய்ய மருந்து மாத்திரை என எல்லாவற்றையும் சாப்பிட்டு பார்ப்பர்கள். என்ன செய்தாலும் வறட்டு இருமல் நிற்பதில்லை.
வரட்டு இருமல் சட்டென்று நிற்க ஒரு கட்டை விரல் கொண்டு இதனை செய்தால் ஒரு நிமிடத்திலே வறட்டு இருமல் நின்றுவிடும். வறட்டு இருமல் தொடங்கும் போதே சிறிது மிளகு எடுத்து வாயில் வைத்து மென்று வந்தால் இருமல் நின்று விடும். குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு மிளகை தூளை தேனில் கலந்து கொடுக்க விரைவில் சரி செய்யலாம்.
கட்டை விரலில் உள்ள கை ரேகையின் இடது பக்கமாக சிறிது அழுத்தத்தை கொடுக்கும் பொழுது வரட்டு இருமல் மெதுவாக குணமாகும். அரை மணி நேரம் இவ்வாறு விரலை வைத்திருக்க வேண்டும். கட்டை விரலில் அழுத்தம் குடுக்கும் போது அதன்மூலம் நரம்பு தூண்டப்பட்டு, செயல்பட்டு வறட்டு இருமல் வருவதை தடுக்கிறது.