fbpx

அதிகம் கவலைப்படுபவரா நீங்கள்.. மன அழுத்தத்தை குறைக்க இந்த சூப் ஒன்று போதும்..!

சுரைக்காய் புரதம், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதனால் சுரைக்காய் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். சீமை சுரைக்காய் சாறு, காய்கறி அல்லது சூப் வடிவில் சாப்பிடலாம். சுரைக்காய் சூப் குடிப்பதால், ஆரோக்கியமாக இருக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். கூடுதலாக, சூப் உடல் எடையை குறைக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. சூப் குடிப்பதால் கிடைக்கும் சில நன்மைகள் இங்கே காணலாம்.

இந்த செய்முறையை செய்ய, முதலில் ஒரு பிரஷர் குக்கரில் தண்ணீரை ஊற்றி, சுரைக்காய் மற்றும் தக்காளியை நறுக்கவும். பின்னர் அவற்றை நன்கு வேகவைத்து, மிக்ஸியில் போட்டு எடுத்து கொள்ள வேண்டும். மேலும் சிறிது நெய்யில் சீரகத்தைச் சேர்க்கவும் அடுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இறுதியாக, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும். தற்போது எடையைக் குறைக்கும் மேஜிக் பானமான சுரைக்காய் சூப் இப்போது தயார்.

சுரக்காய் சூப் சுவையானது மட்டுமல்ல, கோலின் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. கோலின் என்பது மூளை-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் ஊட்டச்சத்தாகும். எனவே, மன அழுத்தத்தை குறைத்து உடல் நலனை பாதுகாக்கிறது.

Baskar

Next Post

சளி, இருமல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்படுகிறார்களா.. எளிய முறையில் வீட்டு வைத்தியம்..!

Sat Dec 24 , 2022
இப்போதைய காலநிலை மாற்றத்தால் சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றை ஒரே நாளில் வீட்டு வைத்தியம் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குணப்படுத்துவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். சமையலில் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்றான மஞ்சள், ஏலக்காய், மிளகு மற்றும் கிராம்பு ஆகியவற்றைக் கொண்டு தொண்டைப் புண் இருமலை எவ்வாறு குணப்படுத்துவது. முதலில் மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளவும். […]

You May Like