fbpx

வேர்க்கடலை சாப்பிடும் நபரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

வேர்க்கடலை என்றாலே விரும்பி உண்ணாதவர் என்று எவரும் இல்லை. இதில் ருசி மட்டும் இல்லாமல் ஏராளமான நன்மைகளும் நிறைந்துள்ளது. அதில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் அதனை எப்போதெல்லாம் உண்ணலாம் என்ற பதிவினை இங்கே காணலாம். 

வேர்க்கடலை பல்வேறு வகையில் உணவினில் சேர்த்து கொள்ளளாம். வறுத்தும் உண்ணலாம், பச்சையாகவும் சாப்பிடலாம், வேக வைத்தும் சாப்பிடலாம், பொரித்தும், சமைத்தும் சாப்பிடலாம். மேலும் , கடலை எண்ணெய் தயாரிக்கவும் வேர்க்கடலை பயன்படுகிறது. 

இதனை உண்ணும் போது பலருக்கும் சில சந்தேகங்கள் எழுகின்றன. எந்த நேரம் இதனை உண்பதற்கு சிறந்த நேரம் என்று ? ஆனால் அதற்கு ஒரே பதில் எப்போது வேண்டுமானாலும் உண்ணலாம் என்பதே பதிலாக அமையும். 

வேர்க்கடலையில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் இருப்பதால் உடல் எடை அதிகரிப்புக்கு உதவுகிறது. மேலும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. பசி எடுப்பதை தள்ளிப்போடுகிறது. 

தினந்தோறும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை எடுத்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் சருமப் பிரச்சனைகளை குறைக்கிறது. மேலும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மையைக் கொடுக்கிறது. மிக முக்கியமான ஒன்று வேர்க்கடலையில் கலோரிகளின் அளவு அதிகமாக உள்ளதால் அளவுடன் உட்கொள்வது நல்லது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 

Baskar

Next Post

அலர்ட்...!அந்தமான் கடல் பகுதிகளில் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி...!

Thu Dec 1 , 2022
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழ்நாடு […]

You May Like