30 வயதிற்குப் பிறகு, எலும்புகள் தேய்ந்து போகத் தொடங்குகின்றன, பெரும்பாலான பெண்களுக்கு முதலில் மூட்டு வலி ஏற்படுகிறது. இதனால் பலர், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்து வருகின்றனர்.
எலும்பு மஜ்ஜை தேய்ந்து வருகிறது என்றால், பலர் அறுவை சிகிச்சை கூட செய்து கொள்கிறார்கள். மூட்டு வலி உள்ளவர்கள் இந்த இலையை உங்கள் வீட்டிற்கு அருகில் வைத்துக்கொள்ளலாம்.
வீட்டிற்கு அருகில் இருக்கும் எருக்கச் செடி எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. இப்பதிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி பயன்படுத்தினால் மணிக்கட்டு மூட்டு வலி உடனே குணமாகும். முதலில், சிறிது கற்றாழை ஜெல்லுடன் சிறிது மஞ்சள் மற்றும் ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய் கலக்கவும்.
பிறகு எருக்க இலையின் இருபுறமும் கடுகு எண்ணெய் விட்டு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு நாம் முதலில் கலக்கிய பேஸ்ட்டை வலியுள்ள மூட்டுகளில் தடவ வேண்டும்.
இதனை தொடர்ந்து அதன்மீது எருக்க இலையை வைத்து, ஒரு வெள்ளை துணியால் மூட்டு மற்றும் மணிக்கட்டு பகுதியில் கட்ட வேண்டும். இதனை இரவில் கட்டிவிட்டு காலையில் அவிழ்த்து விடலாம்.