சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின்கள் நிறைந்தவை. பழத்தில் சுவையை மட்டுமே ருசிப்பதற்கு மட்டுமே எடுத்து கொள்கிறோம். ஆனால் அதிலிருக்கும் தோல்களை தூக்கி எறிந்துவிடுகிறோம்.
ஆரஞ்சு பழங்களில் சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும். மேலும் இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. ஆரஞ்சு பழத் தோல்களிலும் வைட்டமின் சி-யின் சத்துக்கள் நிறைந்துள்ளன. தாவர கலவை மற்றும் பாலிபினால்கள் ஆரஞ்சு தோலில் இருப்பதால் இது நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்றவற்றை எதிர்த்து போராடுகிறது.

சிலர் ஆராய்ச்சியில் கூறியதாவது, ஆரஞ்சு பழத்தினை விட அதன் தோலில் தான் அதிக பாலிபினால் கொண்டுள்ளது. தோலில் இருக்கும் முக்கிய எண்ணெயானது தோல் புற்றுநோயை வரவிடாமல் தடுக்க உதவுகிறது. மேலும் செரிமானத்தையும் அதிகரிக்க உதவுகிறது.
ஆரஞ்சு தோலினை எடுத்து காய வைத்து பொடி செய்து அதனை தயிருடன் சேர்த்து ஃபேஸ் பேக்காக போட்டுக் கொள்ளலாம். சொந்தமாக வீட்டிலே பொடி செய்து சருமத்தை பொலிவாக இயற்கையாகவே பிரகாசமாக்குகிறது. இந்த பொடியை தினந்தோறும் முகத்தில் தேய்த்து வர கரும்புள்ளி நீங்கி முகப்பரு தழும்புகளை நீக்க உதவுகிறது.