விரும்பிய உணவை கூட உண்ண முடியாத அளவிற்கான நிலமையை வாய் புண் உண்டாக்கி விடுகிறது. வாய்ப்புண் வருவதற்கு காரணமாக, மருந்து மாத்திரை சாப்பிடுவது மற்றும் அதிக அளவு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முக்கியமாக இன்னும் கூற போனால் வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் புண் ஏற்படும். அதனால் இதனை சரிசெய்ய முதலில் நாம் வயிற்றில் இருக்கும் புன்னை சரி செய்ய வேண்டும். அப்போது தான் வாயில் வரும் புண் சரியாகும்.
வாய்ப்புண்ணால் இருப்பதால் பலருக்கும் வாய் துர்நாற்றம் வீசும். வயிற்றுப்புண் மற்றும் வாய் புண் முற்றிலும் குணமாகும் டிப்ஸ் பற்றி இங்கே அறிவோம்.
உணவின் மூலமாக இதனை சரிசெய்ய முடியும். தினம்தோறும் உண்ணும் உணவில் கீரைகளை அதிக அளவு சேர்த்து கொண்டாலே உடலில் ஏற்படும் உபாதைகள் வெகுவாக குறைந்து விடும்.
மணத்தக்காளி கீரையை வாரத்திற்கு மூன்று முறை கட்டாயம் எடுத்துக் கொள்ளுதல் மிகவும் நல்லது. இதனை எடுத்துக் கொள்ளும் போது வயிற்றுப்புண்ணானது விரைவில் ஆறிவிடும். மேலும் மணத்தக்காளி இலையை பச்சையாகவே சாப்பிடலாம்.