fbpx

குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி.!?

காய்கறிகளில் மிகவும் சத்தானது வெண்டைக்காய். ஆனால் வெண்டைக்காய் வழவழப்பாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிடாமல் ஒதுக்கி வைப்பார்கள். குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ஈசியாக வெண்டைக்காய் மசாலா எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – கால் கிலோ, நறுக்கிய வெங்காயம், தக்காளி – 1, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி, தயிர் – 2 தேக்கரண்டி, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை – தேவையான அளவு, கடுகு, உளுந்து, சீரகம் – ஒரு டீஸ்பூன்.

முதலில் வெண்டைக்காயை கழுவி சிறிது நேரம் காயவைத்து தண்ணீர் இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதனால் வெண்டைக்காயின் பிசுபிசுப்பு தன்மை சிறிது நீங்கும். பின்பு சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

நறுக்கிய வெண்டைக்காயை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வதக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து தயிர் சேர்த்து நன்கு வதக்கினால் பிசுபிசுப்பு தன்மை முழுவதுமாக நீங்கிவிடும்.

பின்பு வெண்டைக்காயை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், கருவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிய பின் தக்காளி சேர்க்க வேண்டும்.

அதில் வெண்டைக்காய் சேர்த்து பின் சாம்பார் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொஞ்சமாக தண்ணீர் தெளித்து விட வேண்டும். மூன்று முதல் நான்கு நிமிடங்களிற்கு பின் வெண்டைக்காயை கிளறிவிட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த வெண்டைக்காய் பொரியல் ரெடி.

Baskar

Next Post

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு...! தமிழக காவல்துறை அதிரடி...

Thu Jan 11 , 2024
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்கின்ற பெயரில் தமிழக முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று பாஜக அரசு செய்த சாதனைகளையும் விளக்கி வருகிறார். அதன்படி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இரு இடங்களில் இரண்டு நாட்கள் முன்பு பிரச்சாரம் செய்ய சென்றார். வழியில் புகழ்பெற்ற பி.பள்ளிப் பட்டியில் அமைந்துள்ள புனித லூர்து […]

You May Like