உடல் எடை குறைக்க பலரும் பலவற்றை கையாண்டு பார்பார்கள். ஆனால் மஞ்சள் டீ உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதனை பற்றி இங்கே காணலாம்.
செய்முறை விளக்கம் :
பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும்போது அதனில் 1 டேபிள் ஸ்பூன் மிளகு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளினை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். 3 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து விட்டு அதன் பிறகு மூடி போட்டி மூடி வைக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி அதனுடன் தேனை சேர்த்து குடித்து வரலாம். இவ்வாறு இந்த நீரினை பருகி வந்தால் உடல் எடை குறையும். மேலும் தற்போது இருக்கும் குளிருக்கு இதமாகவும் இருக்கும்.