fbpx

குடலில் இருக்கும் கழிவுகளை, உடனே வெளியேற்ற சூப்பர் ஐடியா.! 

நாம் தினமும் சாப்பிடுகின்ற உணவு கழிவுகளாக மாறும்போது அவை முழுமையாக நம்முடைய உடலை விட்டு வெளியேறினால் மட்டும்தான் நம்முடைய உடல் மிகவும் ஆரோக்கியத்துடன் காணப்படும். ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் முயலவில்லை என்றால் கழிவுகள் உடலிலேயே தங்கிவிடும். இதன் காரணமாக நம்முடைய உடலில் விதவிதமான வியாதிகள் வந்து மருத்துவமனையை நோக்கி ஓட வைக்கும். 

அதிலும் உடலில் கழிவுகள் தேங்கினால் மிக மிக ஆபத்து. நச்சுக்களாக மாறி உடலில் பல்வேறு பிரச்சனைகளை அது ஏற்படுத்தும். கழிவுகளை வெளியேற்ற இஞ்சி சாறு குடிப்பது நல்லது. வெறும் வயிற்றில் காலையில் டீ குடிக்கும் போது அதில் இஞ்சி சேர்த்து சாப்பிட்டால் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறிவிடும். 

இஞ்சியைப் போலவே, சூடான தண்ணீரில் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதனுடன் தேனை கலந்து குடித்து வருவது குடலில் இருக்கும் கழிவுகள் அனைத்தையும் உடனே வெளியேற்ற உதவும். கழிவுகளை வெளியேற்றுவதில் இன்றியமையாத பணியை செய்வது வெள்ளை பூண்டு தான். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் வெள்ளை பூண்டை சிறிதளவு சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

இது மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும். உடலில் போதுமான அளவிற்கு நீர் இல்லை என்றால் மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் ஏற்பட்டாலே குடலில் பல்வேறு பிரச்சினை வரும். எனவே நாம் சாப்பிடும் உணவில் அன்றாடம் நார்சத்து அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டால் அது மலச்சிக்கலை போக்கும். மேலும் உடலில் எப்போதும் நீர் சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

Rupa

Next Post

ராமர் கோவில் திறப்பு விழா: ஸ்ரீ ராமரின் சிலை பிரதிஷ்டை செய்வது முதல் கோவிலின் கும்பாபிஷேகம் வரை.! வரலாற்று நிகழ்வுகளின் முழு அட்டவணை.!

Wed Jan 10 , 2024
வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் இருக்கும் இந்துக்களின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக அமைய இருக்கிறது. பல நூற்றாண்டுகளின் கனவான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலை அவரது கோவிலில் பிரதிஷ்டை செய்யும் விழா ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று நடத்தி வைத்து இருக்கிறார். இதற்காக உலகம் முழுவதிலும் […]

You May Like