fbpx

நோய் இன்றி நீண்ட நாள் நலமாக வாழவேண்டுமா.. அதற்கான வழிமுறைகள்..!

நம் அன்றாட வாழ்வில் ஏதாவது ஒரு நோய்களுக்கு நாம் அடிமையாகி கொண்டு இருக்கிறோம். இதனில் இருந்து விடுபெற சிறந்த வழிகளை இங்கே காணலாம். 

நாள்தோறும் 4 பாதாம் பருப்புகளை உண்டு வருவதால் உடலில் இருக்கும் தேவையற்ற பல கொலஸ்ட்ரால் கரைய செய்கிறது. அத்துடன் அரை டீஸ்பூன் அளவு கசகசா சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்லது. கசகசா சேர்ப்பதனால உடலில் உள்ள எலும்புகள் வலுவடையும்.

மேலும், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தினை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது குளிர்ச்சி தன்மை கொண்டால், நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடலுக்கு சிறிது குளிர்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இரண்டு டீஸ்பூன் அளவு கொண்டைக்கடலை சேர்ந்து எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

கொண்டக்கடலை மகத்தான ஒன்று. இது நீரழிவு நோயாளிகள் ஒரு டீஸ்பூன் எடுத்து கொண்டு. அதனை தண்ணீரில் போட்டு ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். மேலும் இதில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற கால்சியம் சத்துகளும் நிறைந்து காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து உலர் திராட்சை சிறிதளவு அதில் சேர்த்துக் கொள்வது நல்லது. இரும்பு சத்துகள் மிகுந்து காணப்படுகிறது. ஒன்று முதல் எட்டு வரை உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பயனாக ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. இதில கூறப்பட்ட ஐந்து பொருட்களையும் இரவில் தூங்குவதற்கு முன் தண்ணீரில் போட்டு ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் உண்டு வர உடல் நோய் இன்றி பலம் பெறும்.

Baskar

Next Post

அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...! முழு விவரம் உள்ளே..‌.

Mon Nov 28 , 2022
தொழிற்‌ படிப்பு பயிலும்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள முன்னாள்‌ படைவீரர்களின்‌ சிறார்கள்‌ கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க கால அவகாசம்‌ நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய முப்படை வீரர்‌ வாரியத்தின்‌ பாரத பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை கோரி 2022-2023 -ஆம்‌ ஆண்டு தொழிற்‌ படிப்பு பயிலும்‌ முன்னாள்‌ படைவீரர்களின்‌ சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க 30:11.2022 வரை கால […]

You May Like