தினமும் காலை பொழுதில் மனது மற்றும் உடலை புத்துணர்ச்சியாக மற்றும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க இதனை செய்தால் போதும்.
உடற்பயிற்சி : காலை நேரத்தில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீர் குடித்தால், உடல் உபாதைகள் சரளமாக வெளியேறும். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சியில் முதலில் சில வார்ம் அப் செய்து விட்டு, அதன் பின்னர் கடினமான சில பயிற்சிகளை செய்ய வேண்டும்.
தியானம்: காலை நேரம் மிகவும் அமைதியான நேரம் எந்த இடையூறும் இல்லாத நேரமாக இருக்கும். எனவே அந்த நேரத்தில் உடலும், மனமும் அமைதியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். அப்போது தியானம் செய்தால் மன ஒருமைப்படும். மேலும் சிந்தனை தெளிவான பார்வையும், கூர்மையும் மேம்படும்.
உணவு : காலை உணவு என்பது மனிதன் வாழ்வில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. எப்போதும் காலை உணவை தவறவிடக்கூடாது. அதனை தொடர்ந்து அந்த உணவில் நிறைய கீரை, காய்கறிகள் இருப்பது மிகவும் அவசியமாக உள்ளது.
இவ்வாறு தினசரி வாழ்நாளில் காலை பொழுதினை கழித்தால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி நிறைந்த வாழ்வாக இருக்கும்.