உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் இருந்து ஒரு இதயத்தை உடைக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.. வெள்ளிக்கிழமை, ஒரு நபர் தனது பச்சிளம் குழந்தையின் உடலை ஒரு பையில் சுமந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த நபர் முழு சம்பவத்தையும் விவரிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் பேசியுள்ள அவர் “ என் பெயர் விபின் குப்தா. நான் ஹரித்வாரில் இருந்து வந்து கொண்டிருந்தேன். என் மனைவியின் சகோதரியும் அவரது கணவரும் என் கர்ப்பிணி மனைவியை கோல்டர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. என் மனைவியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவர்கள் எனக்கு போன் செய்தனர். சிகிச்சையைத் தொடங்கச் சொன்னேன், நான் சென்று கொண்டிருந்தேன்.
அவர் ரூ.8,000 ரொக்கமாக செலுத்தியதாகவும், மீதமுள்ள தொகையை விரைவில் செலுத்துவதாக மருத்துவமனை ஊழியர்களிடம் கூறியதாகவும், சிகிச்சையைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டனர்.. இருப்பினும், மருத்துவமனை நிர்வாகம் “இது ஒரு மார்கெட் அல்ல” என்று அலட்சியமாக பதிலளித்தனர்..” என்று குற்றம்சாட்டி உள்ளார்.
கண்களில் கண்ணீருடனும், மூச்சுத் திணறல் நிறைந்த குரலுடனும் பேசிய அவர், “என் மனைவி ‘குழந்தை எங்கே?’ என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார். நான் அவளுக்கு என்ன சொல்ல வேண்டும்?” என்று கூறினார்.
மேலும் “நாங்கள் பணம் செலுத்திய பிறகு என் மனைவியை மருத்துவமனையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
அந்த நபரின் மனைவி ரூபி அமர் உஜாலாவின் உடல்நிலை மோசமடைந்ததால், உடனடியாக வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தவறான மருந்து காரணமாக குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். மாவட்ட மருத்துவ அதிகாரி, டாக்டர் சந்தோஷ் குப்தா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்து விசாரணையைத் தொடங்கினார்.