மாரடைப்பை ஏற்படுத்தும் ஹீட் ஸ்ட்ரோக்..! 12 மணி முதல் 3 மணி வரை..! தற்காத்துக் கொள்வது எப்படி..!

Heat Stroke: கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிக அளவு உள்ளது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வெயில் பலருக்கு உடல் வெப்பத்தை அதிகரித்து மாரடைப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

உடல் வெப்பநிலை அதிகரித்து வியர்வை வெளியேறுவதை தடுப்பதால் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சாதாரண பாதிப்பு என அலட்சியமாக இருப்பதால், பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, நம் உடலின் உள்வெப்பநிலையும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதைத் தடுப்பதற்காக, வியர்வையின் மூலமாகவும், தோல்களின் வழியாகவும் வெப்பத்தை வெளியேற்றும் வேலையை நம் மூளையில் இருக்கும் தெர்மோஸ்டாட் செய்கிறது.

குளிரான பிரதேசத்தில் இருக்கும்போது நம் உடலிலிருந்து வெப்பம் வெளியேறாமல் பார்த்துக்கொள்ளும். இப்படித் தேவைப்படும்போது நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் நம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது. இந்த தெர்மோஸ்ட் செயலிழந்து விட்டால் ஹீட் ஸ்டோக் ஏற்படுகிறது. இதனால் சிலர் மயக்கம் போட்டு கீழே விழுவார்கள். சில நேரம் ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.

உடல் வெப்பநிலை அதிகரிப்பதை தடுப்பதற்கு நமக்கு நாமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல யுக்திகளை கையாள வேண்டுமென மருத்துவத்துறை எச்சரித்து உள்ளது. அதிக வெப்பமான இடங்களில் இல்லாமல், சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவைவிட 500 மி.லி அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வெப்பத்தை உட்கிரகிக்கும் உடைகளை அணியக் கூடாது. உடலுக்குக் குளிர்ச்சி தரும், நீர்சத்துகள் நிறைந்த பழ வகைகளைச் சாப்பிடவேண்டும். வெயில் காலங்களில் கடுமையான உடற்பயிற்சி, கடுமையான உடல் செயல்பாடு உடைய வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் கார்பனேற்றம் சர்க்கரை நிறைந்த பானங்கள் மற்றும் சூடான பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

மேலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிக்க வேண்டும். கட்டாயமாக வெயிலில் செல்ல வேண்டி இருப்பவர்கள் லேசான பருத்தி ஆடை அணிவதையும் சாதாரண குடிநீரை அதிகம் பருக வேண்டும். சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். உடல் வெப்பநிலை உயர்வு சர்க்கரை நோயாளிகளை அதிகமாக பாதிக்கும் .

Next Post

முக.ஸ்டாலினுக்கு எள்ளு எது? கொள்ளு எது? என்பதே தெரியாது..!! எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பிரச்சாரம்..!!

Wed Apr 10 , 2024
தேனி பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தனது பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த பிரச்சார கூட்டத்தினால் தேனி நகரமே குழுங்குகிறது. இங்கு போட்டியிடும் வேட்பாளர் நாராயணசாமி மிகவும் எளிமையானவர். மக்களோடு மக்களாக இருப்பவர் தான் நம் வேட்பாளர். திமுக வேட்பாளர் எந்த கட்சியில் இருந்து வந்தவர். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இங்கு போட்டியிட்டு போனவர். இப்போது ஏன் வந்துள்ளார். டிடிவி தினகரன் 14 […]

You May Like