கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

rain 1

தமிழகத்தில் நீலகிரி, கோவை தேனி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் பட்சத்தில், அது தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை காலை கரையை கடக்கக்கூடும்.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் அக்டோபர் 1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Vignesh

Next Post

பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை...! இன்று முதல் 3,380 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு...!

Fri Sep 26 , 2025
பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 3,380 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு […]
bus 2025 5

You May Like