காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை…! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை…!

heavy rain

தமிழகத்தில் சென்னை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், அக்டோபர் 5-ம் தேதி நாளை மறுநாள் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போவது கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஷாக்!. காற்று மாசுபாட்டால் 9 மில்லியன் பேர் பலி!. இதய நோய் அபாயம்!. ஆய்வில் தகவல்!

Sat Oct 4 , 2025
ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில், டெல்லி மற்றும் வட இந்தியாவின் வேறு சில மாநிலங்களில் வானம் மூடுபனி மற்றும் புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ளது. இது நுரையீரலை சேதப்படுத்தும் என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் மாசுபாடு உண்மையில் உங்கள் இதயத்திற்கு ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்துமா அல்லது அது இதய நோய்க்கு வழிவகுக்குமா என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியாவிட்டால், மாசுபாட்டிற்கும் இதய நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை ஆராய்ச்சி மற்றும் நிபுணர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். […]
Air pollution vehicles

You May Like