செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்ளில் இன்று கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

rain

இன்று தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்ளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ‘தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், 12-ம் தேதி ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 13 முதல் 16-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உஷார்!. கல் உப்பை இவர்களெல்லாம் சாப்பிடக்கூடாது!. மோசமான விளைவை ஏற்படுத்தும் ஆபத்து!.

Thu Sep 11 , 2025
கல் உப்பு ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஆனால் அது அனைவருக்கும் சரியானதல்ல. யாரெல்லாம் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், அது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கல் உப்பு பெரும்பாலும் ஆரோக்கியமான விருப்பமாகக் கருதப்படுகிறது, இது செரிமானத்திற்கு நல்லது என்று நம்பப்படுகிறது. ஆனால் கல் உப்பு அனைவருக்கும் நன்மை பயக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? கல் உப்பில் சோடியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உயர் […]
salt 11zon

You May Like